திருக்கோனேரி தாஸ்யை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருக்கோனேரி தாஸ்யை [1] என்பவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வைணவப் பெண்மணி. திருவாய்மொழி வாசகமாலை என்னும் நூலை எழுதியவர்.[2] நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். திருக்கோனேரி என்பது திருப்பதி ஏழுமலையான் கோயிலிலுள்ள ஏரி. இந்தத் திருக்குளத்தில் பணிபுரிந்துவந்த பெண் இவர் என்பது இவரது பெயரால் அறியலாகும் செய்தி. இவரைப் பற்றிய வேறு செய்தி கிடைக்கவில்லை.

காலம்[தொகு]

இவரது திருவாய்மொழி வாசகமாலை நூலின் முடிவில் இங்குள்ள வாசகங்கள் உள்ளன

அஸ்மத்குருப்யோ நமஃ, ஆழ்வார் திருவடிகளே சரணம், எம்பெருமானார் திருவடிகளே சரணம், சந்திரகிரி அய்யன் திருவடிகளே சரணம், ஸ்ரீமத் நாராயணையர் திருவடிகளே சரணம், திருக்கோட்டியூர் ஜீயர் திருவடிகளே சரணம், வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்

இதில் குறிப்பிடப்பட்டுள்ள வடக்குத் திருவீதிப் பிள்ளையின் காலம் 1217-1322. பிள்ளை நீண்டகாலம் வாழ்ந்தவர். இதனால் இந்தப் பெண்மணியை 13 ஆம் நூற்றாண்டு எனல் பொருத்தமானது.

அடிக்குறிப்பு[தொகு]

  1. திருக்கோனேரி தாசி, திருக்கோனேரிப் பணிப்பெண்
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 283. {{cite book}}: Check date values in: |year= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கோனேரி_தாஸ்யை&oldid=2717812" இலிருந்து மீள்விக்கப்பட்டது