திரிவேணி வீணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டிட் நிரஞ்சன் ஹல்தாரின் திரிவேணி வீணை

திரிவேணி வீணை ( Triveni veena ) என்பது பண்டிட் கமல் கம்லேவுடன் இணைந்து பண்டிட் நிரஞ்சன் ஹல்தாரால் கண்டுபிடிக்கப்பட்டு காப்புரிமை பெற்ற ஒரு நரம்பிசைக்கருவியாகும். பண்டிட் நிரஞ்சன் ஹல்தார் அனைத்திந்திய வானொலியிலிருந்து (இந்தூர், மத்தியப் பிரதேசம் - இந்தியா) ஓய்வு பெற்ற மூத்த "ஏ" தர கலைஞர் ஆவார். இந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவரான. ஆகாஷ்வானி, தூர்தர்ஷன் மற்றும் சங்கீத நாடக அகாதமிக்காக பல்வேறு கச்சேரிகள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் விசித்திர வீணை மற்றும் கித்தாரைக் கொண்டு இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

நிரஞ்சன் வீணையைக் கண்டுபிடித்த பிறகு, ஒரு தனித்துவமான கருவியைக் கண்டுபிடிக்க பல்வேறு கருவிகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். இது திரிவேணி வீணை எனப் பெயரிடப்பட்டது, (திரிவேணி என்றால் மூன்று ஆறுகள் ) ஏனெனில் இது 3 பொருட்களை (உலோகம், மரம் மற்றும் தோல்) ஒருங்கிணைத்து 3 இசைக்கருவிகளின் கலவையான தொனியை உருவாக்குகிறது

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிவேணி_வீணை&oldid=3698836" இலிருந்து மீள்விக்கப்பட்டது