திரிபுவன விஜயதுங்கதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திரிபுவன விசயதுங்கதேவி (டியா கிதார்யா)
மயபாகித் பேரரசின் சக்கரவர்த்தினி
பார்வதியாகச் சித்தரிக்கப்பட்டுள்ள திரிபுவனா
ஆட்சிக்காலம் மயபாகித் பேரரசு: 1328 – 1350
முன்னையவர் செயநகரன்
பின்னையவர் ஹயாம் வுரூக்
சக்கரதாரன் (கர்த்தவர்த்தன வீர துமாபெல்)
தந்தை ராடென் கர்சவிஜயன் (கர்த்தயச ஜெயவர்த்தனன்)
மரபு ராயச வம்சம்
தாய் டியா காயத்திரி ராஜபத்தினி
பிறப்பு
சமயம் சைவம்

திரிபுவன விசயதுங்கதேவி அல்லது திரிபுவனோத்துங்கதேவி செயவிஷ்ணுவர்த்தனி எனும் முடிக்குரிய பெயரைக் கொண்ட, டியா கிதர்யா என்பவள் மயபாகித்தின் மூன்றாவது சக்கரவர்த்தினியும் சாவக நாட்டு மகாராணியும் ஆவாள். 1328இலிருந்து 1350 வரை மஜபாகித்தை ஆண்டதுடன், அப்பேரரசின் விரிவுக்கும் பெரும் பங்காற்றினாள்.

வாழ்க்கை[தொகு]

மஜபாகித்தின் முதல் மன்னனான ராடென் விஜயனுக்கு காயத்திரி ராஜபத்தினியிடம் பிறந்த இவள், அப்பேரரசின் நான்காவது சக்கரவர்த்தியான ஹயாம் வுரூக்கின் தாயும் ஆவாள். ஹகுரிபன் சீமாட்டி ("Bhre Kahuripan") என்ற செல்லப்பெயரால் குறிப்பிடப்பட்ட இவள், மயபாகித்தையும் அதற்கு முந்திய சிங்கசாரி அரசையும் ஆண்ட இராயச வம்சத்தைச் சேர்ந்தவள்.

ஆட்சி[தொகு]

"நகரகிரேதாகமம்" எனும் சாவக நூலொன்றில், 1328இல், செயநகரன் கொல்லப்பட்ட பின், தன் தாய் காயத்திரியின் ஆணைக்கேற்ப, திரிபுவனா 1329இல் ஆட்சிக்கு வந்ததாககச் சொல்லப்படுகின்றது. 1350இல் தான் இறக்கும் வரை மயபாகித்தை ஆண்டிருக்கிறாள் திரிபுவனா.[1] தன் மைத்துனன் ஆதித்தியவர்மனின் துணையுடன், அவள் போர்க்களத்துக்குப் படைநடத்திச் சென்றதையும், பெடுகு, பெயாங் முதலான அரசுகளை எதிர்த்து, மயபாகித் பேரரசை விரிவாக்கம் செய்ததையும், பாலியைத் தன் ஆட்சியின் கீழ் கொணர்ந்ததையும் நகரகிரேதாகமம் விவரிக்கின்றது.

அடிக்குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

முன்னர்
செயநகரன்
மயபாகித் பேரரசு
1328–1350
பின்னர்
ஹயாம் வுரூக்