திராவிட சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராவிட சங்கம் (Dravida Sangha) என்பது கி.பி. 470 இல் தமிழகத்தின், மதுரை நகரில் வச்சிரநந்தி என்ற சமணத் துறவியால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். இது தமிழகத்தில் சமண சமையத்தைப் பரப்பும் நோக்குடன் துவக்கப்பட்டது. அக்காலகட்டத்தில் மதுரையானது களப்பிரரின் ஆட்சியின்கீழ் இருந்தது.[1] இந்த சங்க உறுப்பினர்கள் சமண சமயத்துக்காக அலைந்து திரிவதை கைவிட்டு, வர்த்தகம் மற்றும் வேளாண்மை போன்ற குடிசார் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.[2] பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ் கல்விப் பிரிவில் பொறுப்பு வகிக்கும் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் கூறுகையில், தமிழ்ச் சங்கம் குறித்த தொன்மக்கதை மதுரையில் இருந்த சமண அவையை (சங்கம்) அடிப்படையாகக் கொண்டது என்று எழுதியுள்ளார்:

"கி.பி 604 இல் மதுரையில் நிறுவப்பட்ட சங்கம் என்று அழைக்கப்பட்ட ஒரு சமண சபை இருந்தது." [3]

வரலாறு[தொகு]

திராவிட சங்கம் கி.பி 470 இல் வச்சிரநதியால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. [4]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Takahashi, Takanobu. Tamil Love Poetry and Poetics. p. 232.
  2. Singh, Narendra. Encyclopaedia of Jainism. p. 2891.
  3. Hart, George. The Milieu of the Ancient Tamil Poems. University of California, Berkeley. Archived from the original on 1997-07-09. பார்க்கப்பட்ட நாள் 2020-02-21.
  4. Somasundaram, O; Tejus Murthy, AG; Raghavan, DV (2016), "Jainism - Its relevance to psychiatric practice; with special reference to the practice of Sallekhana", Indian J Psychiatry, pp. 471–474, எண்ணிம ஆவணச் சுட்டி:10.4103/0019-5545.196702, PMC 5270277, PMID 28197009 {{citation}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=திராவிட_சங்கம்&oldid=3792096" இலிருந்து மீள்விக்கப்பட்டது