திரவ நைட்ரஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திரவ நைதரசன்
திரவ நைதரசனைப் பயன்படுத்தி மாணவர்கள் வீட்டில் பனிக்கூழ் தயாரித்தனர்.

திரவ நைதரசன் (liquid nitrogen) என்பது மிகவும் குறைந்த வெப்பநிலையில் திரவ நிலையில் இருக்கும் நைதரசன் ஆகும். இது ஒரு நிறமற்ற தெளிவான திரவம் ஆகும். இதன் கொதிநிலையில் (−195.79 °C (77 K; −320 °F)) அடர்த்தி 0.807 கி/மிலி ஆகும். இதன் மின்கோடுபுவூடக மாறிலி 1.43.[1] நைதரசன் முதன் முதலில் 1883 ஏப்ரல் 15 இல் சகில்லோனியன் பல்கலைக்கழகத்தில் போலந்து இயற்பியலாளர்களான சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி, கரோல் ஓல்செவ்சுக்கி ஆகியோரால் திரவமாக்கப்பட்டது.[2] தொழில்முறையில் இது திரவக் காற்றை பகுதிபடக் காய்ச்சி வடித்தலின் மூலம் உருவாக்கப்படுகிறது. திரவ நைதரசன் பொதுவாக LN2, "LIN" அல்லது "LN" ஆகிய சுருக்கக் குறியீட்டினால் குறிப்பிடப்படுகிறது. திரவ நைதரசன் ஒரு ஈரணுத் திரவம் ஆகும். அதாவது திரவமாக்கலின் போது N2 வளிமத்தின் N சகப் பிணைப்பின் ஈரணு இயல்பு மாற்றமடையாமல் இருக்கும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Murphy, E. J.. "The Dielectric Properties of Insulating Materials". பார்த்த நாள் 2-10-2012.
  2. Tilden, William Augustus (2009). A Short History of the Progress of Scientific Chemistry in Our Own Times. BiblioBazaar, LLC. பக். 249. ISBN 1-103-35842-1. https://books.google.com/books?id=8SKrWdFLEd4C&pg=PA249. 
  3. Henshaw, D. G.; Hurst, D. G.; Pope, N. K. (1953). "Structure of Liquid Nitrogen, Oxygen, and Argon by Neutron Diffraction". Physical Review 92: 1229. doi:10.1103/PhysRev.92.1229. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரவ_நைட்ரஜன்&oldid=2316079" இருந்து மீள்விக்கப்பட்டது