திரள் கார்முகில்
Appearance
திரள் கார்முகில் | |
---|---|
திரள் கார்முகில் (calvus-type) | |
Abbreviation | Cb |
Symbol | |
Genus | Cumulonimbus (heap, cloud/severe rain) |
Altitude | 2,000–16,000 m (6,500–60,000 ft) |
Appearance | மிக உயரமான, பெரிய மேககூட்டங்கள் |
Precipitation cloud? | அதிக அளவிலான மழை பொழிவு |
திரள் கார்முகில் ((Cb)) என்பவை மிகவும் உயரமான, அடர்த்தியான மேக வகையாகும். இம்மேகங்கள் இடி, மின்னல்களுடன் கூடிய மிக அதிக அளவிலான மழையைப் பொழியும். இந்த வகை மேகக் கூட்டம் பூகோசு அல்லது வெண் புகைமண்டலம் போல திரண்டிருக்கும். இராட்சத அளவில் சில மைல் தொலைவு வரைகூட நீளக் கூடியன. இவை கடுமையான இடி, மின்னல், புயல் காற்றுக்கு வழி வகுக்கும் ஆற்றல் கொண்டவை. மேலும் வானுக்கும் பூமிக்குமாக நகரும் ‘டொர்னாடோ’ என்னும் சுழற்காற்றையும் உருவாக்க வல்லவை.
700 அடிமுதல் 10,000 அடிவரை வெவ் வேறு உயரங்களில் உருவாகக்கூடிய இந்த பெருந்திரள் மேகக் கூட்டத் தை வானூர்திகள் கடக்கும்போது. அவற்றின் மின்னணுக் கருவிகள் திடீரென பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்பட வாய்ப்பு ஏற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.[1]
வெளி இணைப்புகள்
[தொகு]- Clouds-Online.com பல்வேறு முகில் வகைகளை விளக்கும் படங்களுடன் கூடிய முகில் வழிகாட்டி பரணிடப்பட்டது 2020-07-31 at the வந்தவழி இயந்திரம்
- ↑ ஆர்.சிவா (2 ஆகத்து 2016). "கடும் இடி, மின்னல், புயலை ஏற்படுத்தக்கூடிய 'குமுலோநிம்பஸ்' ராட்சத மேகக் கூட்டத்தில் சிக்கியதா விமானம்?- மாயமான விமானத்தில் பலமுறை சென்ற ராணுவ அதிகாரி புதிய தகவல்". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2016.