தியு யெ மொன் துவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித்தானிய இராச்சியத்தின் மரபுச்சின்ன மேலங்கியின் கேடயத்தின் கீழுள்ள சுருள்பட்டையில் இக்குறிக்கோளுரையைக் காணலாம்.

தியொ யெ மோன் த்ருவா (Dieu et mon droit, பிரெஞ்சு உச்சரிப்பு: ​[djø e mɔ̃ dʁwa]) என்பது இங்கிலாந்தில் பிரித்தானிய மன்னரின் குறிக்கோளுரை ஆகும்.[1] இது பிரித்தானிய அரச மரபுச்சின்னத்தில் கேடயத்தின் கீழுள்ள சுருள்பட்டியில் எழுதப்பட்டுள்ளது.[2] இக்குறிகோளுரை ஆளுவதற்கான பேரரசரின் தெய்வீக உரிமையை குறிக்கிறது.[3] இதனை முதன்முதலாக இங்கிலாந்தின் முதலாம் ரிச்சர்டு சண்டைகளின்போது பயன்படுத்தி வந்ததாகவும் பின்னர் இதையே இங்கிலாந்து அரசாட்சியின் அலுவல்முறை அரச மரபுச்சின்னத்தில் குறிக்கோளுரையாக 15வது நூற்றாண்டில் ஐந்தாம் ஹென்றி ஏற்றுக்கொண்டதாகவும் கருதப்படுகிறது.[3]


சான்றுகோள்கள்[தொகு]

  1. British Royal Coat of Arms and Motto பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம் Accessed 23 December 2008
  2. "Coats of arms". royal.gov.uk. http://www.royal.gov.uk/MonarchUK/Symbols/Coatsofarms.aspx. பார்த்த நாள்: 25 April 2009. 
  3. 3.0 3.1 Dieu Et Mon Droit on British Coins Accessed 23 December 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியு_யெ_மொன்_துவா&oldid=3704256" இருந்து மீள்விக்கப்பட்டது