தியாகராய நகர் பத்மாவதி கோயில்
பத்மாவதி கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 13°02′43″N 80°14′29″E / 13.0452°N 80.2415°E |
பெயர் | |
பெயர்: | பத்மாவதி கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தியாகராய நகர் |
மாவட்டம்: | சென்னை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பத்மாவதி |
தாயார்: | பத்மாவதி |
தீர்த்தம்: | சிறிய புஷ்கரணி |
சிறப்பு திருவிழாக்கள்: | பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம், வசந்தோற்சவம், தெப்போற்சவம், கார்த்திகை விளக்கீடு, நவராத்திரி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
வரலாறு | |
நிறுவிய நாள்: | 13 பெப்பிரவரி 2021 |
கட்டப்பட்ட நாள்: | 17 மார்ச்சு 2023 |
அமைத்தவர்: | திருமலை திருப்பதி தேவஸ்தானம் |
பத்மாவதி கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் தியாகராய நகர் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் இலட்சுமி கோயில் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]கடல் மட்டத்திலிருந்து சுமார் 29.87 மீ. உயரத்தில், (13°02′43″N 80°14′29″E / 13.0452°N 80.2415°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, தியாகராய நகர் பகுதியில், ஜி. என். செட்டி சாலை என்று அழைக்கப்படும் கோபதி நாராயண செட்டி சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.[2]
கோயில் நில தானம்
[தொகு]இந்தியாவிலேயே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் பத்மாவதி தாயாருக்காக, தமிழ்நாட்டில் முதன் முதலாகக் கட்டப்பட்டுள்ள இக்கோயிலுக்காக, விஷ்ணு பக்தைகளான, முன்னாள் நடிகை காஞ்சனாவும் அவரது சகோதரியும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கள் சொந்த நிலங்களைத் தானமாகக் கொடுத்துள்ளனர்.[3]
பூமி பூசை
[தொகு]காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரசுவதி சுவாமிகளால் 2021 ஆம் ஆண்டு பெப்பிரவரி 13ஆம் நாள் இக்கோயிலுக்கான பூமி பூசை, சென்னை தியாகராய நகரில் தற்போது இக்கோயில் அமைந்துள்ள இடத்தில் நடைபெற்றது.[4]
சிறப்பம்சங்கள்
[தொகு]சுமார் ஆறு கிரவுண்ட் நிலத்தில், மூன்று கிரவுண்ட் அளவுள்ள நிலத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தில் மண்டபம், புஷ்கரணி, மடப்பள்ளி மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன. மூலவரான தாயார் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. நாலரை அடி உயரமும் மூன்றரை அடி அகலமும் கொண்டதாக மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.[5]
மன்னர்கால முறையில் கற்களால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.[6] மூன்று நிலைகளையுடைய இக்கோயிலின் இராஜ கோபுரம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. இராமானுசர், விஷ்வக்சேனா ஆகியோர் சிலைகள் இக்கோயிலை அலங்கரிக்கின்றன.[7] தாயார் சன்னதியின் துவார பாலகிகள் வனமாலி, பலாக்கினி ஆகிய இருவரின் சிலைகளும் சன்னதியின் வாயிலில் காணப்படுகின்றன.[8] சுமார் 10 கோடி இந்திய ரூபாய் மதிப்பீட்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.[9]
மகா கும்பாபிசேகம்
[தொகு]இக்கோயிலின் மகா கும்பாபிசேகம் 17 மார்ச்சு 2023 அன்று, தியாகராய நகர் பத்மாவதி தாயார் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.[10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சென்னை தியாகராய நகரில் மார்ச் 17-ம் தேதி பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்" (in ta). 2023-03-13. https://www.hindutamil.in/news/spirituals/959461-padmavati-mother-temple-kumbabhishekam.html.
- ↑ Ma Riya. "சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் கட்டிய பத்மாவதி தாயார் கோயில்.. நாளை பிரம்மாண்ட கும்பாபிஷேகம்..!" (in ta). https://tamil.asianetnews.com/gallery/spiritual/sri-padmavathi-thayar-temple-kumbabishekam-march-17-rrlxpx.
- ↑ "பல கோடி மதிப்பு நிலம்... தானமாக கொடுத்த நடிகை... இந்தியாவின் முதல் பத்மாவதி தாயார் கோவில்" (in ta). https://tamil.indianexpress.com/lifestyle/tamil-padmavathi-thayar-temple-indias-first-time-in-chennai-617493/.
- ↑ "சென்னையில் பத்மாவதி தாயாருக்கு கோயில் பூமி பூஜையில் விஜயேந்திரர் பங்கேற்பு". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2024-10-19.
- ↑ மாலை மலர் (2023-03-17). "சென்னை பத்மாவதி தாயார் ஆலய சிறப்பு அம்சங்கள்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-19.
- ↑ "தி.நகரில் கட்டப்பட்டு வரும் பத்மாவதி தாயார் கோவில் 2023 பிப்ரவரியில் திறக்க முடிவு…" (in en-US). 2022-09-24. https://patrikai.com/under-construction-t-nagar-padmavathi-mother-temple-will-be-open-in-february-2023/.
- ↑ Ragupathi R. "சென்னையில் பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் - குவிந்த பக்தர்கள்!!" (in ta). https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/kumbabhishekam-in-padmavathi-thayar-temple-built-by-tirupati-devasthanam-in-t-nagar-rrnbf3.
- ↑ "சென்னை பத்மாவதி தாயார் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்" (in ta). 2023-03-17. https://www.hindutamil.in/news/spirituals/961671-kumbabhishekam-today-at-padmavathi-temple-in-chennai.html.
- ↑ Suresh K. Jangir (2023-03-16). "ஸ்ரீ பத்மாவதி தாயார் சிலை இன்று காலை பிரதிஷ்டை: நாளை கும்பாபிஷேகம்" (in ta). https://www.maalaimalar.com/devotional/worship/chennai-padmavathi-thayar-temple-kumbabishekam-on-tomorrow-583903.
- ↑ "சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்" (in ta). 2023-03-18. https://www.hindutamil.in/news/spirituals/962162-sri-padmavathi-temple-kumbabhishekam-held-in-chennai-tnagar.html.