தினா பதக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தினா பதக் (Dina Pathak; 4 மார்ச் 1922 - 11 அக்டோபர் 2002) ஓர் இந்திய நடிகை மற்றும் குசராத்தி நாடக இயக்குனர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் (NFIW) ஒரு செயற்பாட்டாளர் மற்றும் தலைவராக இருந்தார். [1] [2]

இந்தி மற்றும் குசராத்தி திரைப்படங்கள் மற்றும் நாடக நடிகர்களில் ஒருவரான தினா பதக் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக 120 திரைப்படங்களில் நடித்தார். பாவை நாட்டுப்புற நாடக பாணியில் இவரது தயாரிப்பான மேனா குர்ஜாரி, பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடியது. [3]

கோல் மால் மற்றும் குப்சூரத் ஆகிய இந்திப் படங்களில் நடித்த பாத்திரங்களுக்காக இவர் பரவலாக அறியப்படுகிறார். கோஷிஷ், உம்ராவ் ஜான், மிர்ச் மசாலா மற்றும் மோகன் ஜோஷி ஹசீர் ஹோ போன்ற படங்களில் இவரது கதாப்பாத்திரங்கள் பரவலாக கவனம் பெற்றது . [4]

இவருடைய குறிப்பிடத்தக்க குசராத்தி படங்களில் மோட்டி பா , மலேலா மற்றும் பவானி பவை ஆகியன இருந்தது.தின்கிளேகர், டால்சு ஹவுசு, விஜன் சேனி மற்றும் கிரீஷ் கர்னாடின் அயவதனா இது சத்யதேவ் துபேயினால் இயக்கப்பட்டது ஆகிய நாடகங்கள் பரவலாக அறியப்பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தீனா பதக் 4 மார்ச் 1922 அன்று குசராத்தின் அம்ரேலியில் பிறந்தார். இவர் அழகுணர்வு மற்றும் திரைப்படங்களினால் ஈர்க்கப்பட்டார், மற்றும் இளம் வயதில், நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் . நடிப்பு வாழ்க்கையில் இவர் விமர்சகர்களின் நேர்மறையான பாராட்டைப் பெற்றார். [3] [5] இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் (மும்பை) இணைந்த கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். ராசிக்லால் பரிக் இவருக்கு நடிப்பில் பயிற்சி அளித்தார், சாந்தி பர்தன் இவருக்கு நடனம் கற்றுக் கொடுத்தார். [5]

இளம் வயதில், இந்திய தேசிய நாடக அரங்கில் நடிகையாக சேர்ந்தார். இவர் தனது மாணவர் செயல்பாட்டிற்காக அறியப்பட்டார், அங்கு குசராத்தில் இருந்து பாவை நாடக பாணியில் நடித்தார்,இது ஒரு நாட்டுப்புற நாடக வடிவம், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில்,பிரித்தானிய ஆட்சி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பரவலாக இந்த பாணி பயன்படுத்தப்பட்டது , இது இந்திய மக்கள் நாடக குழுவுடன் (ஐபிடிஏ), [6] இவளுடைய மூத்த சகோதரி சாந்தா காந்தி மற்றும் தங்கை தார்லா மேத்தாவுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியது. மும்பையில் இருந்தபோது, அங்குள்ள குசராத்தி நாடகக் கலையினை புத்துயிர் பெறுவதில், கைலாசு பாண்டியா மற்றும் தாமினி மேத்தா போன்ற சக குசராத்தி நடிகர்களுடன் சேர்ந்து ஒரு முக்கியப் பங்காற்றினார். [7]

தொழில் வாழ்க்கை[தொகு]

இவர் 1940 களில் குசராத்தில் தனது நாடகங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மைனா குர்ஜாரியில் இவர் கதாநாயகியாக நடிப்பதைக் காண பார்வையாளர்கள் பரவலாக பெருந்திரளாகக் கூடினர். இது சகோதரி சாந்தா காந்தியுடன் இணைந்து ஜஸ்மா ஒதானில் நடித்தார் பாவை நாடக பாணியில் மிகவும் பரவலாக அறியப்படும் நாடகமாகவும் இது இருந்தது . [8] 1957 ஆம் ஆண்டில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் முனைவர் ராஜேந்திர பிரசாத் முன்னால் இவர் மேனா குர்ஜாரி நாடகம் நிகழ்த்தியயதன் மூலம் இதுவரை இந்த சாதனையை நிகழ்த்திய முதல் மற்றும் ஒரே குசராத்தி நாடகம் எனும் பெருமை பெற்றது. [9]

சான்றுகள்[தொகு]

  1. Need to make women aware: Dina Pathak The Tribune, 3 February 2000.
  2. Women panels 'toothless' The Tribune, 1 May 1999.
  3. 3.0 3.1 Brandon, p. 83
  4. Veteran actress Dina Pathak passes away தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 11 October 2002.
  5. 5.0 5.1 Baradi, Hasmukh (2004). Lal, Ananda. ed. The Oxford Companion to Indian Theatre. New Delhi: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0195644468. இணையக் கணினி நூலக மையம்:56986659. http://www.oxfordreference.com/view/10.1093/acref/9780195644463.001.0001/acref-9780195644463-e-0480. 
  6. "The Grand Dame of Indian Cinema" The Tribune, 11 April 1999
  7. "Veteran actress Dina Pathak passes away" பரணிடப்பட்டது 12 சூலை 2004 at the வந்தவழி இயந்திரம் Indian Express, 12 October 2002.
  8. "From Gujarat with grace". 11 June 2006. http://www.tribuneindia.com/2006/20060611/spectrum/main2.htm. 
  9. "Reliving the past of Gujarati Rangbhoomi". 27 March 2013 இம் மூலத்தில் இருந்து 15 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130615195310/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-27/ahmedabad/38069233_1_world-theatre-day-costumes-villages. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினா_பதக்&oldid=3315595" இலிருந்து மீள்விக்கப்பட்டது