திண்டிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திண்டிமம் என்பது ஒருவகைப் பறை முழக்கம். இதனை ‘டிண்டிமம்’ என்பர். ‘டமாரம்’ என்பது இக்கால வழக்கு. முரசு முழக்குதல், கொம்பு ஊதுதல் முதலான ஆரவார முழக்கங்களின் திண்மை கொண்டு விளங்குவதால் இந்த முழக்கத்தின் கூட்டொலியைத் திண்டிமம் என்றனர். திண்டிமம், டிண்டிமம் ஆகிய சொற்களை வடசொல் என மு. ராகவையங்கார் குறிப்பிடுகிறார்.

ஆசுகவி பாடவல்ல புலவர்கள் வெளியே பொதுப்பணி நிமித்தமாகச் செல்லும்போது திண்டிமம் என்னும் பறை முழக்கத்தோடு செல்லும் உரிமை பெற்றிருந்தனர். இதனைத் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது.

பண்தரு பெருங்கவிப் புலமைக்கு நீ சொன்ன
படி திண்டிமம் முழங்க (சப்பாணிப் பருவம் 2)
பாவாணர் மங்கலக் கவிமொழி பாடி
பரிந்து திண்டிமம் முழங்க [1]

திண்டிமம் என்னும் சொல் பிங்கல நிகண்டில் வருகிறது.

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. சிறுபறைப் பருவம் 4
"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டிமம்&oldid=1991365" இருந்து மீள்விக்கப்பட்டது