திகளர்
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
|---|---|
| மொழி(கள்) | |
| தமிழ், கன்னடம் | |
| சமயங்கள் | |
| இந்து சமயம், பௌத்தம், சைனம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| வன்னியர் |
திகளா (Thigala) அல்லது திகளர் (Thigalar) என்பவர்கள் இந்தியாவின், கருநாடகம் மற்றும் தமிழ்நாட்டில், குறிப்பாக பெங்களூரு நகரம் மற்றும் தெற்கு கருநாடகத்தில் காணப்படும் ஓர் இனக்குழுவினர் ஆவர். இச்சாதியினரின் பாரம்பரிய வாழ்வாதாரமாக பூ, காய்கறி தோட்டங்கள் உள்ளன.[1][2] லால்பாக் தோட்டக்கலை மேம்பாட்டிற்காக, ஐதர் அலி, திகளா மக்களை நியமித்தார், பின்னர் அவர்கள் பெங்களூரை, மலர் (பூங்கா) நகரமாக மாற்றுவதில், முக்கியப் பங்கு வகித்தனர்..[3]
இவர்கள் பொதுவாக இந்துக்கள்.[1] இவர்களின் முக்கிய தெய்வம் தருமராய சாமி மற்றும் திரௌபதி ஆவர். பெங்களூரில் கார்பரேசன் அருகில் உள்ள கி.பி 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தர்மராய சுவாமி கோயில், பெங்களூரில் வசிக்கும் திகளர் மக்களின் முதன்மைக் கோயிலாகும். பெங்களூரின் நிறுவனரான கெம்பெ கவுடா, நகரத்தின் மையத்தில் உள்ள இந்தக் கோயிலுக்கு நான்கு கோபுரங்களை கட்டினார்.[4] இவர்களின் முக்கிய விழாவான கரகத் திருவிழாவானது கோலார், பெங்களூர், ஹோசகோட்டே, ஆனேகல், கனகபுரா, ஜக்கசந்திரா போன்ற பல நகரங்களில் கொண்டாடப்படுகிறது.[5] கருநாடகத்தில் உள்ள திகளர் கன்னடத்தையும், தமிழ்நாட்டில் தமிழையும் பேசுகிறனர்.[6]
1994 ஆம் ஆண்டு கர்நாடக மாநில அரசானது, திகளர் மக்களை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக வகைப்படுத்தியது.
திகளாரி மொழி
[தொகு]கன்னடம் கலந்த தமிழை இவர்கள் பேசுகின்றனர். இது திகளாரி என அழைக்கப்படுகிறது. இதுவே திகளா சமூகத்தின் தாய்மொழி ஆகும்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Singh, Kumar Suresh; India, Anthropological Survey of (2003-01-01). People of India (in ஆங்கிலம்). Anthropological Survey of India. ISBN 9788185938981.
- ↑ http://www.ncbc.nic.in/Writereaddata/cl/karnataka.pdf
- ↑ Lalbagh's history through the ages. Deccan Herald. 2021.
- ↑ Karnataka State Gazetteer: Bangalore District (in ஆங்கிலம்). Director of Print., Stationery and Publications at the Government Press. 1990-01-01.
- ↑ Kamath, Suryanath U. (1996-01-01). A Handbook of Karnataka (in ஆங்கிலம்). Government of Karnataka, Karnataka Gazetteer Department.
- ↑ Kumar Suresh Singh (2003). People of India. Anthropological Survey of India. ISBN 9788185938981 – via Google Books.