தாஸ்யம் பிரணாய் பாஸ்கர்
தாஸ்யம் பிரணாய் பாஸ்கர் | |
---|---|
விளையாட்டு, இளைஞர் சேவைகள், இளைஞர் நலன், என்சிசி சுயவேலைவாய்ப்பு துறை அமைச்சர் | |
பதவியில் டிசம்பர் 1994 – செப்டம்பர் 1995 | |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1989–1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பார்க்கல் | 6 சூலை 1956
இறப்பு | 6 சூலை 1999 பட்டன்செரு | (அகவை 43)
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி (1982–1996) |
துணைவர் | தாஸ்யம் சுபிதா |
பிள்ளைகள் | தாஸ்யம் அபிநவ்ய பாஸ்கர் , தாஸ்யம் அபூர்வா பாஸ்கர் |
முன்னாள் கல்லூரி | வாரங்கல் |
தாஸ்யம் பிரனய் பாஸ்கர் (Dasyam Pranay Bhasker) (பிறப்பு 6 ஜூலை 1956) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்தார். கனம்கொண்டா சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]தாஸ்யம் பிரனாய் பாஸ்கர் 1956 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி வாரங்கல் மாவட்டத்திலுள்ள பார்க்கலில் பிறந்தார். [2]
அரசியல் வாழ்க்கை
[தொகு]1989 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் கனம்கொண்டா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பி. வி. ரங்காராவிடம் தோல்வியடைந்தார். ஆனால் 1994 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு பி. வி. ரங்காராவைத் தோற்கடித்தார்.[3] மேலும் என். டி. ராமராவ் அமைச்சரவையில் விளையாட்டு, இளைஞர் சேவைகள், இளைஞர் நலன், என்சிசி சுயவேலைவாய்ப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
தெலுங்கானா இயக்கம்
[தொகு]தாஸ்யம் பிரனாய் பாஸ்கர் அப்போதைய தனி தெலுங்கானா இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of MLAs".Election Commission of India
- ↑ "Warangal West MLA" பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம். Andhra Pradesh MLA's portal.
- ↑ [1]. Partywise Comparison for Hanamkonda Constituency of Andhra Pradesh.
- ↑ Pranay Bhasker an inspiration to Telangana movement The Hans India
- ↑ [2]. Deccan Chronicle. 11 June 2014