தாவா தெம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவா தெம்
ཟླ་བ་སྒྲོལམོ
தனிச் செயலாளர், அரச கழக செயலகம்
பதவியில்
சூன் 1, 1965 – அகோடபர் 1967
அரசர் ஜிக்மே தோர்ஜி வாங்சக்
மாவட்ட ஆட்சியர், திம்பு மாவட்டம்
பதவியில்
அக்டோபர் 1967 – சூலை 1971
நெறிமுறை அலுவலர், வெளியுறவுத் துறை
பதவியில்
சூலை 1971 – 1973
அரசர் ஜிக்மே தோர்ஜி வாங்சுக்
ஜிக்மே சிங்கே வாங்சுக்
உறுப்பினர், அரச கழக ஆலோசனைக் குழு
பதவியில்
1973–1985
அரசர் ஜிக்மே சிங்கே வாங்சுக்
செயலாளர், பூட்டான் தேசிய மகளிர் சங்கம்
பதவியில்
பெப்ரவரி 23, 1985 – 2009
தனிநபர் தகவல்
பிறப்பு மே 16, 1944(1944-05-16)
ஹா, ,பூட்டான்
இறப்பு பெப்ரவரி 15, 2018(2018-02-15) (அகவை 73)
திம்பு
தேசியம் பூட்டானியர்

தாசோ தாவா தெம் (Dasho Dawa Dem மே 16, 1944 – பிப்ரவரி 15, 2018) பூட்டான் இராச்சியத்தில் ஒரு அதிகாரியாக இருந்தார். இவர் 1965 முதல் 1985 வரை இரண்டு தசாப்தங்களாக உத்தியோகபூர்வ வாழ்க்கையில் , அரச கழக செயலகம், , திம்பு மாவட்ட நிர்வாகம், வெளியுறவு அமைச்சகம், அரச கழக ஆலோசனை கழகம் ஆகிய பல்வேறு அரசு கிளைகளில் பதவிகளை வகித்தார். இவர் 1981இல் பூட்டானின் தேசிய மகளிர் சங்கத்தை நிறுவ உதவினார். பின்னர், 1985இல் அதன் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் 2009இல் ஓய்வு பெற்றார். 2018இல் இறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

தாவா தெம், மே 16, 1944 அன்று ஹா மாவட்டத்தில் உள்ள தக்கு கோயன்பாவில் பிறந்தார். ஹாவில், 1956 முதல் 1963 வரை பள்ளியில் படிக்கும் நவீன கல்வியைப் பெற்ற முதல் பூடானியர்களில் ஒருவராக இருந்தார். இவர் பூட்டான் அரசாங்க உதவித்தொகையின் கீழ் பல்வேறு இந்தியப் பள்ளிகளில் மேலும் படித்தார்.[1]

அரசு சேவை[தொகு]

இவர், சூன் 1, 1965 அன்று ஒரு தனிச் செயலாளராக பூட்டானில் உள்ள அரச கழக செயலகத்தில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அக்டோபர் 1967இல், திம்பு மாவட்ட நிர்வாகத்தில் ராம்ஜம் (உதவி மாவட்ட குற்றவியலில் நீதிபதி/மாவட்ட ஆட்சியர் [2] [3] ) ஆக உயர்த்தப்பட்டார். அங்கு இவர் சூலை 1971 வரை பணியாற்றினார். [2] 1971இல் இவர் புதிதாக நிறுவப்பட்ட வெளியுறவு அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு இவர் 1973 வரை ஒரு நெறிமுறை அதிகாரியாக பணியாற்றினார். இவர் இப்போது செயல்படாத அரச கழக ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக பதவி உயர்வு பெற்றார். அதில் 1985 வரை பதவியில் இருந்தார்.

தாவா தெம், பூட்டானின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் ஆவார்.[4][5] 1967இல் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டபோது, பூட்டானின் மூன்றாவது [[டிரக் கியால்ப்போ], ஜிக்மே தோர்ஜி வாங்சுக் அவர்களால் திம்புவில் தாஷோ என்ற மரியாதைக்குரிய பட்டம் வழங்கப்பட்டது.[5] முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்பது மட்டுமின்றி, பூட்டானிய ஆட்சிப் பணி நிர்வாகத்தில் சேர்ந்த முதல் பெண் எனவும், அரச கழக ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் எனவும் பெருமையைப் பெற்றார். மேலும்,தாஷோ என்ற பட்டத்தைப் பெற்ற சில பெண்களில் இவரும் ஒருவராக இருக்கிறார்.

மற்ற நடவடிக்கைகள்[தொகு]

ஒரு நிர்வாகியாக இவர் 1971இல் ஆத்திரேலியாவில் பேசப்படும் ஆங்கிலச் சான்றிதழ் படிப்பில் சேர்ந்து பட்டம் பெற்றார். பின்னர், 1973இல் சப்பானில் உள்ள பொது நிர்வாக நிறுவனத்தில் தேசிய அரசு நிர்வாகத்தில் ஒரு படிப்பில் சேர்ந்தார்.[2]

தாவா தெம், 1981இல் பூட்டானின் தேசிய மகளிர் சங்கத்தை நிறுவ உதவினார். அரச கழக ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருந்தபோது பிப்ரவரி 23, 1985 அன்று இவர் மகளிர் சங்கத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பூட்டானின் தேசிய மகளிர் சங்கமானது பூட்டானின் முதன்மையான பெண்கள் சங்மாகும். இவர் 2009இல் பூட்டானின் தேசிய மகளிர் சங்கத்தின் தலைமைப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.[5]

1985ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் பத்தாண்டு மாநாட்டிலும், 1995ஆம் ஆண்டு பெண்களின் நான்காவது உலக மாநாட்டிலும் இவர் கலந்து கொண்டார்.[2]

இறப்பு[தொகு]

தாவா தெம் பிப்ரவரி 15, 2018 அன்று திம்புவில் உள்ள ஜிக்மே தோர்ஜி வாசுக் தேசிய நினைவு மருத்துவமனையில் தனது 73 வயதில் இறந்தார். பிப்ரவரி 26 அன்று இவர் தகனம் செய்யப்பட்டார்.[4] The Privy Council of Bhutan, in a press release, stated[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dasho Dawa Dem passes away". February 28, 2018. https://kuenselonline.com/dasho-dawa-dem-passes-away/. 
  2. 2.0 2.1 2.2 2.3 Dorji, C. T. (2008). 100 Prominent People of Modern Bhutan. Prominent Publishers. பக். 82–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788186239223. Dorji, C. T. (2008). 100 Prominent People of Modern Bhutan. Prominent Publishers. pp. 82–84. ISBN 9788186239223.
  3. Rajbanshi, K.G.; Csavas, I. (June 1982). "AQUACULTURE DEVELOPMENT IN BHUTAN". http://www.fao.org/3/P8793E/P8793E02.htm#ch2.3. 
  4. 4.0 4.1 "Dasho Dawa Dem passes away". February 28, 2018. https://kuenselonline.com/dasho-dawa-dem-passes-away/. 
  5. 5.0 5.1 5.2 5.3 Kinley Dem (February 27, 2018). "Dasho Dawa Dem, Bhutan's first female Ramjam passes away aged 74". http://www.bbs.bt/news/?p=90843. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவா_தெம்&oldid=3759557" இருந்து மீள்விக்கப்பட்டது