தாரா தேவி (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரா தேவி
இயற்பெயர்தோல் குமாரி கார்கி
பிறப்பு(1945-01-15)15 சனவரி 1945
இந்திரா சோக் காத்மாண்டு, நேபாளம்
இறப்பு23 சனவரி 2006(2006-01-23) (அகவை 61)
காட்மாண்டு, நேபாளம்
தொழில்(கள்)பாடுதல்

தாரா தேவி (Tara Devi ) 15 சனவரி 1945 - 23 சனவரி 2006) ஒரு நேபாள பாடகராவார். இவர் "நேபாளத்தின் நைட்டிங்கேல்" என்று அழைக்கப்படுகிறார். [1] இவர் தனது வாழ்நாளில் 4,000 பாடல்களை [2] பதிவு செய்துள்ளார். இவரது இசையின் பெரும்பகுதி தேசபக்தி மற்றும் அன்பின் கருப்பொருள்களைச் சுற்றி வந்தது. [3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர் நேபாளத்தின் காத்மாண்டுவில் இந்திரா சோக் என்ற பகுதியில்1945 இல் பிறந்தார். இவர் ஏழு வயதில் பாட ஆரம்பித்தார். "சங்கூரி வாரி நிஹோ தியோ தாரா பானி" என்பது இவரது பிரபலமான பாடல்களில் ஒன்றாகும்.

தாரா தேவி 1945 இல் காத்மாண்டுவில் கிருஷ்ண பகதூர் என்பவருக்கும், இராதா தேவிக்கு தோல் குமாரி கார்கி என்ற பெயரில் பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது, நேபாள வானொலிக்குச் சென்று பாடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் தனது பாடலால் அனைவரையும் மிகவும் ஈர்த்தார். வானொலியில் குழந்தைகள் நிகழ்ச்சிகளுக்காக பாடுவதில் இவர் முதன்மையாக ஈடுபட்டார். இவர், படிப்போடு சேர்ந்து தனது இசை வாழ்க்கையையும் தொடர முடிந்தது. இவர் இசையில் இளங்கலை முடித்தார்.

தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில், இவர் நேபாள வானொலியில் பாடியதற்க்காக ரூ.5 ஊதியமாக பெற்றார். இது இறுதியில் ரூ. 100 க்கு வந்தது. இவர் தனது பாடும் வாழ்க்கையில் மிகவும் திருப்தி அடைந்தார். மேலும், நேபாள வானொலியில் ஒரு கரிதாராக நியமிக்கப்பட்டார். பின்னர் நேபாள வானொலிக்கான 30 ஆண்டுகால உறுதிப்பாட்டின் போது செயலாளராக பதவி உயர்வு பெற்றார்.

தாரா தேவி "நேபாளத்தின் நைட்டிங்கேல்" என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார். பிரார்த்தனை பாடல்கள் முதல் நேபாளி நாட்டுப்புற பாடல்கள் வரை பரவலான வகைகளின் பாடல்களை இவர் பதிவு செய்துள்ளார். அவற்றில் பெரும்பாலானவை நேபாளத்தில் பாரம்பரிய பாடல்களாக கருதப்படுகின்றன. நேபாளத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெண் பாடகியும் இவரால் ஏதோ ஒரு வகையில் பெரிதும் ஈர்க்கப்படுகிறார். இவரது பிரபலமான பாடல்களில் சில; 'உக்காலி ஓராலி ஹரு மா', 'பூல் கோ துங்கா', 'நிர்தோஷ் மேரோ பச்சயோ.

திருமணம்[தொகு]

இவர் 1966 ஆம் ஆண்டில் சிவா பகதூர் சிரேஸ்தா என்ற விமான ஓட்டியை திருமணம் செய்து கொண்டார். இரத்த புற்றுநோயால் தனது 25 வயது மகனை இழந்த பின்னர், தாரா தேவி தனது வாழ்க்கையின் பிற்பகுதியில், கடினமான காலங்களைத் தாங்கினார். விரைவில், இவரது கணவரும் ஒரு விமான விபத்தில் இறந்தார். இந்த சோகத்திலிருந்து இவரால் மீள முடியவில்லை. இவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பின்னர் நடுக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்டார். இது அவரது பாடும் வாழ்க்கையை நிறுத்தியது. 21 ஜனவரி 2006 அன்று, அவர் தனது 60 வயதில் மரணம் அடைந்தார். இவரது கடைசி இசை வெளியீடான "அஃபந்தா கோ மன்மா", அவரது கடைசி நான்கு பாடல்களைக் கொண்டுள்ளது. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

விருதுகள்[தொகு]

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பாடுவதில் சிறந்து விளங்கிய இவர், நேபாளி மொழியை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது மெல்லிசைகளின் மூலம் பிரபலப்படுத்தி நேபாளி இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

  • கோர்கா தட்சிணா பாஹுவின் ஆணை முதல் வகுப்பு உறுப்பினர்.
  • மகேந்திர-இரத்னா விருது.
  • இந்திர ராஜ்ய இலட்சுமி விருது.
  • ஜெகதாம்பாள் விருது.
  • சின்னலதா விருது, 'மைனா'.

குறிப்புகள்[தொகு]

  1. "Swar Kinnari Tara Devi".
  2. Tara Devi MP3 Songs
  3. Nepali Singer Tara Devi Dies at 60 பரணிடப்பட்டது 2006-02-07 at the வந்தவழி இயந்திரம் OhMyNews – 23 January 2006

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_தேவி_(பாடகர்)&oldid=3267632" இலிருந்து மீள்விக்கப்பட்டது