தாம்பாளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தாம்பாளம் அல்லது தட்டு(ஆங்கிலத்தில்: Tray) என்பது ஒரு ஆழமற்ற தளம் ஆகும், இது பொருட்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுகிறது. இது தட்டுக்களை விட பெரியதாக இருக்கும். இது வெள்ளி, வெண்கலம், காகிதத்தாள், இரும்புத்தகடு, மரம், மெலமைன், மற்றும் வார்ப்படக்கூழ் உள்ளிட்ட ஏராளமான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. விலைகளைப் பொறுத்து தாம்பாளத்தட்டுக்கள் ஏராளமான வகைப்படும், உணவுவிடுதிகளில் பயன்படுத்தப்படும் மெலமைன் அல்லது வார்ப்படக்கூழ்களினாலான தாம்பாளங்கள் விலை மலிவானதும், ஒருமுறைப் பயன்படுத்தகூடியதுமாகும். வீடுகளில் நடுத்தரவிலைகளில் கிடைக்கும் மரத்தட்டுக்கள், எவர்சில்வர், வெண்கலத் தாம்பாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. விலையுயர்ந்த உணவுவிடுதிகளில் வெள்ளி மற்றும் வெண்கலத்தாலான தாம்பாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தம்பாளங்கள் பொதுவாக தட்டையானது, பொருட்கள் நழுவுவதைத் தவிர்க்க இதன் விளிம்புகள் உயர்த்தப்பட்டிருக்கும். சிலத் தாம்பாளங்கள் கைப்பிடிகளுடனும், சிலவற்றின் அடிப்புறத்தில் சிறிய காற்பகுதிகளுடனும் தயாரிக்கப்படுகின்றது.

வகைகள்[தொகு]

நெகிழித் தாம்பாளம்.
பானக் காகிதக்கூழ் வார்ப்புத் தாம்பாளம்
தோட்டக்கலை வேளாண்மையில் பயன்படும் விதைத் தட்டு விதைப்புகளுக்கும், வளர்ந்த செடிகளை வெட்டி எடுத்துச் செல்லவும் மற்றும் நட்டு வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.


  • பரிசாரகர் தாம்பாளம் இது கைப்பிடியுடனும் கால்மடிப்புடனும் செய்யப்பட்டிருக்கும், இது எளிதில் பானங்களை எடுத்துசெல்ல உதவுகிறது.
  • சிற்றூண்டிச்சாலை தட்டு சிற்றூண்டிகளில் உணவுப்பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுகிறது. இது பொதுவாக நெகிழி அல்லது பைபர்கிளாஸ்களால் ஆனது.
  • ஒரு குழித்தாம்பாளம் (அ) அறைத்தட்டு சிறிய பிரிவுகளால் ஆக்கப்பட்டிருக்கும், இதனால் வெவ்வேறு உணவுவகைகள் எளிதில் கலப்பில்லாமல் இடம்பெறும்.
  • காகிதக்கூழ் வார்ப்பு தாம்பாளம் துரித உணவுவிடுதிகள், குழம்பிவிடுதிகள், தியேட்டர்களில் வழங்கப்படுகிறது, இது எளிதில் அப்புறப்படுத்தக்கூடியது அல்லது மறுசுழற்சிக்குரியது ஆகும். இந்ததட்டு நான்கு ஒற்றைப்பயன் கிண்ணங்களை வைத்திருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது.
  • அறுவைசிகிச்சை தாம்பாளம் அறுவைசிகிச்சை உபகரணங்களை எடுத்துச்செல்ல பயன்படுகிறது, இது துருவேறா எஃகுவினால் செவ்வக வடிவில் கிருமியழித்தலின் போது வெப்பத்தை தாங்கும்வண்ணமும் துருவேறாமலும் உருவாக்கப்படுகின்றது.
  • விதைத் தட்டு விதைகளிலிருந்து காய்கறிகள், மலர்கள் மற்றும் பிறதாவரங்களை பெருக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.[1] இது வெட்டிய செட்டிகளை எடுத்துசெல்லவும் பயன்படுத்தப்படுகிறது. விதை உற்பத்திகளில் பயன்படும் தட்டுக்கள் விரிவாக்கப்பட்ட பல்தைரீன் அல்லது பாலித்தீன்களால் உருவாக்கப்படுகிறது.
  • இருட்டறை தாம்பாளம், இது ஒளிப்படவியலில் பயன்படுகிறது.
  • பேக்கிங் தாம்பாளம் கணப்பு அடுப்புகளில் பல்வேறு உணவுவகைகளை, இதன் மீதுவைத்து சமைக்கப் பயன்படுகிறது. இது உணவு வகைகளை 'கணப்பு அடுகளின்' உட்புறமுள்ள வெப்பக்காற்றுக்கு ஆட்படுத்த உதவும் வேளையில், உருகும் கொழுப்பு மற்றும் நீர்மங்கள் கணப்பு அடுப்பின் தரையின் மீது விழுவதை தடுக்கிறது.

தமிழர்களின் வாழ்வில் தாம்பாளம்[தொகு]

பண்டையகாலத்திலிருந்தே தமிழர்கள் கடவுள்வழிபாடு, திருமணம், சீர்வரிசை செய்தல் போன்ற சமயங்களில் பழங்கள், காய்கறிகள், சீர்பொருட்களை தாம்பாளத்தின் மீது வைத்து எடுத்துச்செல்லுதல் என்பது தொன்று தொட்டு வழக்கமாகும்.[2]

சான்றுகள்[தொகு]

  1. Use of seed trays
  2. "தமிழர்வாழ்வில் தாம்பாளம்". பார்த்த நாள் அக்டோபர் 22, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பாளம்&oldid=2943696" இருந்து மீள்விக்கப்பட்டது