தாமோதர் ராஜா நரசிம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமோதர் ராஜா நரசிம்மா
ஆந்திரப் பிரதேச அரசின் ஐந்தாவது துணை முதல்வர்
பதவியில்
10 ஜூன் 2011[1] – 21 பிப்ரவரி 2014[2]
முன்னையவர்கோனேரு ரங்கா ராவ்
தொகுதிஆந்தோல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 திசம்பர் 1958 (1958-12-05) (அகவை 65)
மேடக் மாவட்டம், தெலங்காணா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்பத்மினி ரெட்டி
பிள்ளைகள்1

சிலாரப்பு தாமோதர் ராஜா நரசிம்மா (Cilarapu Damodar Raja Narasimha) (பிறப்பு: டிசம்பர் 5, 1958) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2011 மற்றும் 2014 க்கும் இடையில் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக பணியாற்றினார் [3] இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக ஆந்தோல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மேலும் உயர் கல்வி மற்றும் விவசாயம் (பொறுப்பு) போன்ற துறைகளின் அமைச்சர் பதவிகளை வகித்தார். [4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சிலாரபு தாமோதர் ராஜா நரசிம்மா 1958 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மேடக் மாவட்டத்தில் ஒரு தலித் குடும்பத்தில் காங்கிரசு அரசியல்வாதியான ராஜா நரசிம்மா மற்றும் ஜனாபாய்க்கு மகனாகப் பிறந்தார். [5] [6] இவரது தந்தை மூன்று முறை ஆந்தோலை பிரதிநிதித்துவப்படுத்தி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

பொறியியல் பட்டம் பெற்ற இவர் தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, அரசியலில் நுழைந்தார். [7]

அரசியல் வாழ்க்கை[தொகு]

நரசிம்மா, 1989 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக ஆந்தோல் தொகுதியிலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2004 மற்றும் பின்னர் 2009 இல் மீண்டும் வெற்றி பெறும் வரை அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியடைந்தார்

2004 ஆம் ஆண்டு எ. சா. ராஜசேகர் ரெட்டியின் அமைச்சரவையில் தொடக்கக் கல்வி அமைச்சராக நரசிம்மா இணைந்தார். 2009 இல், இவர் சந்தைப்படுத்தல் மற்றும் கிடங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். [8] [9]

நரசிம்மா 10 ஜூன் 2011 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்று ஏப்ரல் 2014 வரை அப்பதவியை வகித்தார் [10] [11]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் பத்மினி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Raja Narasimha is deputy CM" (in en). The Times of India. 11 June 2011. https://timesofindia.indiatimes.com/city/hyderabad/Raja-Narasimha-is-deputy-CM/articleshow/8808101.cms. 
  2. Reddy, B. Muralidhar; Joshua, Anita (28 February 2014). "Andhra Pradesh to be under President’s Rule" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/andhra-pradesh-to-be-under-presidents-rule/article5736028.ece. 
  3. Krishnamoorthy, Suresh (15 August 2007). "Working wonders with computers". The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/Working-wonders-with-computers/article14816411.ece. 
  4. "VC posts kept in ‘wait’ mode". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/channels/cities/hyderabad/vc-posts-kept-%E2%80%98wait%E2%80%99-mode-898. 
  5. "Fathers death forced Damodar into politics". 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
  6. "Its all in the family". 2007-04-27. http://www.hindu.com/2007/04/27/stories/2007042712560400.htm. 
  7. "Fathers death forced Damodar into politics". 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21.
  8. "Fathers death forced Damodar into politics". 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-21."Fathers death forced Damodar into politics".
  9. "Vegetable prices soar, likely to go up". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2009-10-05/hyderabad/28098259_1_rythu-bazar-onion-supply-prices-of-other-vegetables. 
  10. "With Reddy-Dalit combine on top, Cong to counter Jagan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2010-11-29/india/28223742_1_kadapa-mp-ysr-loyalist-ysr-family. 
  11. "Damodar Raj Narasimha sitting pretty in Andole". The Hindu. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/damodar-raj-narasimha-sitting-pretty-in-andole/article5884503.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமோதர்_ராஜா_நரசிம்மா&oldid=3821366" இலிருந்து மீள்விக்கப்பட்டது