கோனேரு ரங்கா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனேரு ரங்கா ராவ்
Koneru Ranga Rao
4 ஆவது ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர்
பதவியில்
9 அக்டோபர் 1992 – 12 திசம்பர் 1994
முன்னையவர்சகந்நாத ராவ்
பின்னவர்தாமோதர் இராசா நரசிம்மா
தொகுதிதிருவூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூலை 1936
விசயவாடா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது விசயவாடா, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா )
இறப்பு15 மார்ச்சு 2010 (வயது 73)
ஐதராபாத்து (இந்தியா) , ஆந்திரப் பிரதேசம் (1956–2014) , இந்தியா (தற்பொழுது ஐதராபாத்து (இந்தியா) , தெலங்காணா , இந்தியா)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

கோனேரு ரங்கா ராவ் (Koneru Ranga Rao) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1936 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். காங்கிரசு கட்சியை சேர்ந்த இவர் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கோனேரு ரங்கா ராவ் ஆந்திர மாநிலம் விசயவாடாவில் உள்ள குடவல்லியில் பிறந்த ஒரு தலித் தலைவராவார். இவர் ஒரு பி.ஏ. பட்டதாரியாக அறியப்படுகிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

கோனேரு ரங்கராவ் தனது கிராமமான குண்டவல்லியின் சர்பஞ்சாக தேர்ந்தெடுக்கப்பட்டு 20 ஆண்டுகள் அந்த கிராமத்தில் பணியாற்றினார்.

கானிபாடு தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சமூக நலத்துறை அமைச்சரானார். திருவூர் தொகுதியில் இருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். நகராட்சி வளர்ச்சி, அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். கோட்லா விசய பாசுகர ரெட்டி ஆட்சியின் போது கோனேரு ரங்கா ராவ் துணை முதல்வராக இருந்தார். [1]

இறப்பு[தொகு]

கோனேரு ரங்க ராவ் 2010 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15 ஆம் தேதியன்று இறந்தார் [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கோனேரு ரங்கராவ் திருமணமாகி நான்கு குழந்தைகளைப் பெற்றார். முன்னாள். நாடாளுமன்ற உறுப்பினர் மல்லு ரவி இவரது மருமகன் என்றும் அறியப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Koneru Ranga Rao Dead - Hyderabad News on fullhyd.com". Fullhyderabad.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
  2. "Press Information Bureau English Releases". Pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2013-08-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனேரு_ரங்கா_ராவ்&oldid=3813789" இலிருந்து மீள்விக்கப்பட்டது