தாங்கிப் பக்கம்
ஒரு செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கம் (cathetus, கிரேக்கச் சொல் Κάθετος இலிருந்து உருவானது; பன்மை: catheti) என்பது அச்செங்கோண முக்கோணத்தின் செங்கோணத்தைத் தாங்கும் இரு பக்கங்களைக் குறிக்கும். அதாவது செங்கோணத்தின் அடுத்துள்ள பக்கங்கள் தாங்கிப் பக்கங்களாகும். செங்கோணத்திற்கு எதிரேயுள்ள பக்கம், செம்பக்கம் எனப்படும்.
ஒரு செங்கோண முக்கோணத்தின் தாங்கிப் பக்கங்கள் இரண்டும் சம நீளமானவையென்றால் அம்முக்கோணம், இருசமபக்க செங்கோண முக்கோணம் என அழைக்கப்படும். தாங்கிப் பக்கங்களின் விகதங்கள் மூலமாக முக்கோணவியல் சார்புகளான டேன்சன்ட்டு, கோடேன்சட்டு சார்புகள் வரையறுக்கப்படுகின்றன.
செங்கோண முக்கோணத்தின் செம்பக்கத்திற்கு வரையப்படும் குத்துக்கோட்டால் செம்பக்கத்தில் ஏற்படும் இரு கோட்டுத்துண்டுகளில் ஒரு தாங்கிப்பக்கத்தை அடுத்துள்ள கோட்டுத்துண்டின் நீளம் மற்றும் முழுச் செம்பக்கத்தின் நீளத்தின் பெருக்கல் சராசரியாக அத்தாங்கிப் பக்கத்தின் நீளம். இருக்கும்.
பித்தேகோரசு தேற்றத்தின்படி, ஒரு செங்கோண முக்கோணத்தின் இரு தாங்கிப் பக்கங்களின் நீளங்களின் வர்க்கங்களின் கூடுதல் அம்முக்கோணத்தின் செம்பக்கத்தின் நீளத்தின் வர்க்கத்திற்குச் சமமாக இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- Bernhardsen, T. Geographic Information Systems: An Introduction, 3rd ed. New York: Wiley, p. 271, 2002.
- Cathetus at Encyclopaedia of Mathematics
- Weisstein, Eric W., "Cathetus", MathWorld.