தவழ்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தவழ்தல் அல்லது ஊர்ந்து செல்லல் என்பது (Crawling or Quadrupedal movement) என்பது மனிதர் இடம்பெயர்து செல்ல பயன்படுத்தும் ஒரு முறையாகும். இதை மனிதன் இடம்பெயர மிகப்பழங்காலத்தில் இருந்து பயன்படுத்திவந்த ஒரு முறையாகும்.[1] இது பெரும்பாலும் விலங்கினங்களின் நாற்கால் நகர்வை ஒத்தது.[2]

மனிதன் தவழும் தருணங்கள்[தொகு]

இத்தாலியில் தீ அணைப்புப் பணியின்போது குழந்தைகள் தரையில் ஊர்ந்து செல்கின்றனர்.
 • குழந்தை பருவத்தில் மனிதனால் நடக்க இயலாத நிலையில் தவழ்கிறான்.
 • சண்டைகளின் போது ஊர்ந்து செல்வது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது:
 •  ஒரு நபரால் நடக்க இயலாமல் போவது, அதவாவது உடலில் காயமேற்படுதல், போதையில் குடித்துவிட்டு நடக்க முடியாத நிலை ஏற்படுவது போன்ற சமயங்களில் ஊா்ந்து செல்கிறான்.
 •  மிகவும் குறுகளான இடங்களில் (எ.கா. குகைகள், மேசையின் கீழ், சுரங்கம்). சில நேரங்களில் நிலத்தடி சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் வேலையின்போது நீண்ட தூரத்தை கடக்க வேண்டிய நேரத்தில் ஊா்ந்து செல்லுகின்றனா்.
 •  தரையில் ஏதாவது தேடும் போது,
 •  பராமரிப்பிற்காக, வேலை சம்பந்தப்பட்ட பிற நோக்கங்களுக்காக,
 • நகைச்சுவை நோக்கங்களுக்காக ஊர்ந்து செல்வர்.
 • திருட்டுத்தனமாக உருவத்தை மறைக்க ஊர்ந்து செல்வர்.
 • பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் கீழே விழாமல் இருக்க தவழ்வது உண்டு
 • பயிற்சிக்காக (சீருடைப் பணியாளர்கள்)
 •  நெருப்பு எாிந்து கொண்டிருக்கும்போது  போது, ஊர்ந்து செல்லலாம் ஏனெனில் தரையின் அடியில் ஆக்ஸிஜன் எளிதாக கிடைக்கும் சுவாசிக்க எளிதாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தவழ்தல்&oldid=2748646" இருந்து மீள்விக்கப்பட்டது