தவளை மீன்
தவளை மீன் | |
---|---|
தவளை மீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | தவளை மீன் |
துணைக்குடும்பம் & பேரினம் | |
|
தவளை மீன் (Frogfish) ஆன்டெனாரிடே குடும்பத்தின் சோம்பேறித் தூண்டில் மீன் வகைப்பாட்டைச் சேர்ந்த ஒரு மீன் வகையாகும். இவ்வகை மீன் பொதுவாக ஆழமற்ற வெப்பமண்டல நீரில் காணப்படும். இத்துணைவரிசையில் நான்கு வகை மீன் குடும்பங்கள் அடங்கியுள்ளன. இவ்வகை மீன்கள் பெரிய வாய்கள் மற்றும் பெரும்பாலும், முட்கள் நிறைந்த தோல்கள் கொண்ட கட்டியான மீன்களாக இருக்கும். இம்மீனின் நீளம் 30 செ.மீ அளவுக்குள் இருக்கும். இஸ்டிரியோ என்ற சில தவளை மீன்கள் எதிரியின் கண்களுக்கு எளிதில் புலப்படாமல் கடற்பாசி முட்டைகள் போன்றிருக்கும். இம்மீன்கள் சாா்காசாக் கடலிருந்து மிதந்து வடக்கு வளைகுடா நீரோட்டத்தினை நோக்கிச் செல்லும். இவை சுற்றுப்புறச் சூழ்நிலைகளோடு தம்மை ஒன்றுபடுத்தி வாழும் இயல்புடையவை. உடலில் பலவிதத் தோல் மடிப்புகளையும் பலவித வண்ணமுடைய தோல்களையும் உண்டாக்கி கடற்பாசிக்குள் மறைந்து வாழும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Arnold, R.J.; Harcourt, R.; Pietsch, T.W. (2014). "A New Genus and Species of the Frogfish Family Antennariidae (Teleostei: Lophiiformes: Antennarioidei) from New South Wales, Australia, with a Diagnosis and Key to the Genera of the Histiophryninae". Copeia 2014 (3): 534–539. doi:10.1643/ci-13-155. https://www.researchgate.net/publication/267751462.
- ↑ "தவளை மீன்". அறிவியல் களஞ்சியம் தாெகுதி 11. தஞ்சாவுா் தமிழ் பல்கலைக்கழகம். அணுகப்பட்டது 11 சூலை 2017.