தற்செயற்கண்டுபிடிப்பு கலை விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தற்செயற்கண்டுபிடிப்பு கலை விழா
வகைகலை விழா
நாள்திசம்பர் (வருடந்தோறும்)
அமைவிடம்(கள்)கோவா, இந்தியா
நிறுவல்2016
வருகைப்பதிவு450,000[1]
புரவலர்கள்ஹீரோ எண்டர்பிரைசசு, சுனில் காந்த் முஞ்சால்
வலைத்தளம்
Serendipity Arts Festival

தற்செயற்கண்டுபிரிப்பு கலை விழா (Serendipity Arts Festival) என்பது கோவாவின் பனஜியில் திசம்பர் மாத இறுதியில் ஒரு வாரம் நடைபெறும் வருடாந்திர கலை விழா ஆகும்.[2] இந்த விழாவினை 2016ஆம் ஆண்டு ஹீரோ எண்டர்பிரைஸின் தலைவரான சுனில் காந்த் முன்ஜால் என்பவரால் துவக்கிவைக்கப்பட்டது.[3] கலை, நாடகம், இசை, இலக்கியம், நடனம், உணவு மற்றும் கைவினைப்பொருட்கள் போன்ற பல துறை நிகழ்ச்சியாக இந்தியாவில் நடைபெறும் கலை விழா இதுவாகும்.[4][5] துறை இடைத் திருவிழாவாக நடைபெறும் இந்த விழா இந்திய ஊடகங்களில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.[6]

இந்த திருவிழாவினை காண எவ்வித கட்டணமும் வசூலிப்பதில்லிஅ. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த விழாவில் 450,000 மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.[7] 2019ஆண்டு விழாவில் மாண்டோவி ஆற்றின் சில பாரம்பரிய கட்டமைப்புகள் உட்பட 12 இடங்களில் நடைபெற்றது. மேலும் பட்டறைகள், நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் கலைக் கண்காட்சிகள் உட்பட 95க்கும் மேற்பட்ட நிகழ்வுகளைக் கொண்டிருந்தது.[2][8]

இந்த விழாவை இலாப நோக்கற்ற தற்செயற்கண்டுபிடிப்பு கலை அறக்கட்டளை அமைப்பு ஏற்பாடு செய்கின்றது.[9] ஒவ்வொரு ஆண்டு விழாவும் ஒரு புதிய மேற்பார்வைக் குழுவால் திட்டமிட்டு நடத்தப்படுகிறது. 2019ஆம் ஆண்டில், காட்சிக் கலை நிகழ்ச்சிகளைக் கலைஞர்கள் ஜோதிந்திர ஜெயின் மற்றும் சுதர்சன் செட்டி, சமையல் கலைகளைச் சமையல் கலைஞர் ராகுல் அகர்கர், நடனம் மயூரி உபாத்யா, இசை சினேகா கான்வால்கர் மற்றும் பலர் இணைந்து நிகழ்த்தியிருந்தனர்.[10][11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Serendipity Arts Festival founder: 'What India offers in terms of art and culture is phenomenal'". The National.
  2. 2.0 2.1 "The art of expression at Serendipity Arts Festival". www.telegraphindia.com.
  3. "The arts need as much attention as the economy, says Sunil Kant Munjal, founder, Serendipity Arts Festival". October 29, 2017.
  4. Kumar, Tanuj (December 8, 2017). "Serendipity Arts Festival strikes again". Livemint.
  5. "'Culture can become India's most powerful strategic weapon': SK Munjal at Serendipity Arts Festival 2018". www.indulgexpress.com.
  6. Kumar, Surya Praphulla (December 14, 2019). "Serendipity Arts Festival 2019: Goa's culture party gets bigger" – via www.thehindu.com.
  7. "Reviving patronage in arts and culture around the country". February 1, 2020.
  8. "What to watch out for at Goa's upcoming Serendipity Arts Festival". Condé Nast Traveller India. October 18, 2019.
  9. "Post-Hero MotoCorp, Sunil Munjal is drawing up a new plan: Driving art via Serendipity Trust". December 2, 2016 – via The Economic Times.
  10. "Goa's Serendipity Arts Festival announces new set of curators". May 9, 2019 – via www.thehindu.com.
  11. "This year, at the Serendipity Arts Festival, an exploration of culinary legacies and the craft of food". December 16, 2019.