தர்சனா ஜர்தோசு
தர்சனா ஜர்தோசு (Darshana Jardosh)(பிறப்பு: சனவரி 21, 1961) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய இந்திய இரயில்வே இணை அமைச்சராகவும் மற்றும் இந்திய ஜவுளி அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார். இவர் குசராத்தில் உள்ள சூரத் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். மேலும் இவர் 2009-ல் 15வது மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தொடர்ந்து 2014-ல் 16வது மக்களவை மற்றும் 2019-ல் 17வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழில்
[தொகு]தர்சனா 2009-ல் நடைபெற்ற 15வது மக்களவை தேர்தலில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டில், வைர வர்த்தகத்தை அதிகரிக்கச் சூரத்தில் சூரத்து பன்னாட்டு வானூர்தி நிலையத்தினை அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று இவர் கோரினார்.[2] 2012-ல், காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் துசார் சௌத்ரி, சூரத்திற்கு வானூர்தி இணைப்புக்கான பெருமையைப் பெற முயன்றதாக இவர் விமர்சித்தார். இவரும் நவசாரி நாடாளுமன்ற உறுப்பினர் சிஆர் பாட்டீலும் பிரச்சாரம் செய்தனர்.[3]
2014 தேர்தலில் சூரத்திலிருந்து மக்களவைக்கு மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 5,33,190 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது இந்தியத் தேர்தல் வரலாற்றில் இந்திரா காந்திக்குப் பின் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராவார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் 4வது அதிக முன்னிலை பெற்றவர் இவராவார். இத்தேர்தலில் இவர் 76.6% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.[4]
2019 தேர்தலில் சூரத்திலிருந்து மக்களவைக்கு 7,95,651 வாக்குகள் பெற்று மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 சூலை 2021 அன்று , நரேந்திர மோதியின் அமைச்சக விரிவாக்கத்தின் போது, இந்திய இரயில்வே இணை அமைச்சராக தர்சனா பதவியேற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jardosh, Patil lash out at Centre". Daily News and Analysis. Surat. 13 August 2009. http://www.dnaindia.com/india/report-jardosh-patil-lash-out-at-centre-1282046. பார்த்த நாள்: 12 April 2014.
- ↑ . 14 July 2009.
- ↑ . 31 January 2012.
- ↑ "Congress, BJP candidates file nominations for Surat seat". 8 April 2014. http://timesofindia.indiatimes.com/city/surat/Congress-BJP-candidates-file-nominations-for-Surat-seat/articleshow/33450379.cms. பார்த்த நாள்: 12 April 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- இந்திய அரசாங்க போர்ட்டலில் விரிவான சுயவிவரம்
- தர்ஷனா ஜர்தோஷ் ட்விட்டரில்
- Facebook இல் Darshana Jardosh