தயில் இயங்குருபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயில் இயங்குருபு (Thiyl radical) என்பது RS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் இயங்குருபு ஆகும். சில சமயங்களில் இதுவோர் இயங்குருபு என்பதை அழுத்தம் கொடுத்து சொல்லும் நோக்கத்தோடு RS• என்று புள்ளியிட்டும் எழுதுவதுண்டு. வாய்ப்பாட்டிலுள்ள R என்பது ஆல்கைல் அல்லது அரைல் பதிலீட்டைக் குறிக்கும். ஏனெனில் S–H பிணைப்புகள் C–H பிணைப்புகளைக்காட்டிலும் 20% பலவீனமானவையாகும். தயில் இயங்குருபுகள் RSH என்ற வாய்ப்பாட்டால் அறியப்படும் தயோல்களிலிருந்து எளிமையாக உருவாக்கப்படுகின்றன. [1] தயோல்-யீன் வினையில் தயில் இயங்குருபுகள் இடைநிலை விளைபொருள்களாகும். இவையே சில பலபடி மேற்பூச்சுகளுக்கும் ஒட்டுபசைகளுக்கும் அடிப்படையாகும். தயோல்களை அசோபிசு ஐசோபியூட்டைரோநைட்ரைல் போன்ற தொடக்கப்பொருளைப் பயன்படுத்தி ஐதரசன்-அணு கருத்துப்பொருளால் உருவாக்க இயலும்:[2]

RN=NR → 2 R + N2
R + R′SH → R′S + RH

சில உயிர்வேதியியல் வினைகளில் தயில் இயங்குருபுகள் இடைநிலைகளாகவும் செயல்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dénès, F.; Pichowicz, M.; Povie, G.; Renaud, P. (2014). "Thiyl Radicals in Organic Synthesis". Chemical Reviews 114: 2587-2693. doi:10.1021/cr400441m. 
  2. Hoyle, C. E.; Lee, T. Y.; Roper, T. (2004). "Thiol–enes: Chemistry of the Past with Promise for the Future". Journal of Polymer Science Part A: Polymer Chemistry 42: 5301-5338. doi:10.1002/pola.20366. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயில்_இயங்குருபு&oldid=3003661" இலிருந்து மீள்விக்கப்பட்டது