தயோல்-யீன் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயோல்-ஈன் வினை (Thiol-ene reaction) என்பது ஒரு தயோல் மற்றும் ஆல்க்கீன் ஆகியவை வினைபுரிந்து தயாேஈதரைத் தரும் ஒரு கரிம வினை ஆகும். இந்த வினை முதன்முதலில் 1905 ஆம் ஆண்டில் அறிவியல் உலகிற்கு அறிவிக்கப்பட்டது.[1] ஆனால் 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் அதன் இயலுமை மற்றும் பரந்த அளவிலான பயன்பாடுகளின் காரணமாக முக்கியத்துவம் பெற்றது.[2][3] இந்த வினைகள் உயர் அளவிலான விளைபொருள் உருவாக்கம், முப்பரிமாண தேர்திறன், உயர் வீதம் மற்றும் வெப்ப இயக்கவியல் உந்து சக்தி ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், இந்த வினை ஒரு கிளிக் வேதியியல் வினையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

தியோல்-என் கூட்டல் எதிர்வினையின் அடிப்படை திட்டம்
தியோல்-என் கூட்டல் எதிர்வினையின் அடிப்படை திட்டம்

இந்த வினை ஒரு ஆல்க்கீனுடன் ஒரு தயோல் சேர்மத்தை மார்கோவ்னிகோவ் எதிர் சேர்க்கை வினையில் முடிகிறது. உயர் அளவிலான விளைபொருள் உருவாக்கம், முப்பரிமாண தேர்திறன் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், வேதியியலாளர்களுக்கு தொகுப்பு முறை வினைகளில் மிகப் பயனுள்ளதாக இருக்கும். தயோல்-ஈன் வினைகள் பொருள் அறிவியலிலும் மற்றும் உயிரியல் மருத்துவ அறிவியலிலும் ஏராளமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. [2] [4]

வினை வழிமுறைகள்[தொகு]

தனி உறுப்பு சேர்க்கை வினை[தொகு]

தயோல்-ஈன் சேர்க்கை வினைகள் இரண்டு வெவ்வேறு வழிமுறைகள் மூலம் நிகழ்வது அறியப்படுகின்றது. அவை: தனியுறுப்பு- சேர்க்கை வினைகள் மற்றும் வினையூக்கியின்ம முன்னிலையிலான மைக்கேல் சேர்க்கை வினைகள் ஆகும். தனி உறுப்பு சேர்க்கை வினைகள் ஒளி, வெப்பம் அல்லது தனி உறுப்பு துவக்கிகளால் தொடங்கப்பட்டு தயாேல் தனி உறுப்புகளை உருவாக்குகின்றன. இவ்வாறான தனி உறுப்பு இயங்கி மார்க்கோவ்னிகோவ் எதிர் சேர்க்கை வழியாக ஈன் வேதி வினைக்குழுவுடன் இணைந்து கார்பன் மைய தனி உறுப்பை உருவாக்குகிறது. ஒரு சங்கிலி-பரிமாற்ற படி தயோலில் இருந்து ஒரு ஐதரசன் தனி உறுப்பை நீக்குகிறது. இது பின்னர் பல பரவுதல் படிநிலைகளில் பங்கேற்கலாம்.

தயோல்-ஈன் தனி உறுப்பு சேர்க்கை வினைகள் வேதியியல் தொகுப்பு முறைகளுக்கு சாதகமானவை ஆகும். ஏனெனில், படி வளர்ச்சி (பரவல் மற்றும் சங்கிலி-பரிமாற்ற படிகள்) மற்றும் சங்கிலி வளர்ச்சி (ஓரினபலபடியாக்கல் ) செயல்முறைகள் ஒரே மாதிரியான பலபடி வலையமைப்புகளை உருவாக்க திறம்பட பயன்படுத்தப்படலாம். ஒளிவேதி பலபடியாக்கல் என்பது நானோ தொழில்நுட்பம், உயிரியப் பொருட்கள் மற்றும் பொருள் அறிவியலில் உள்ள பயன்பாடுகளுக்கு பயனுள்ள தனிஉறுப்பு சார்ந்த வினை ஆகும். ஆனால், இந்த வினைகள் ஆக்சிசனின் தடுப்பு திறன்களால் தடுக்கப்படுகின்றன.

மைக்கேல் சேர்க்கை வினை[தொகு]

தயோல்-யீன் வினைகள் மைக்கேல் சேர்க்கை வழிமுறையில் நிகழ்வதாக அறியப்படுகின்றன. இந்த வினைகள்ஒரு காரம் அல்லது கருக்கவர் பொருள் கொண்டு வினையூக்கம் செய்யப்பட்டு எதிர் மார்கோவ்னிகாவ் விதி அடிப்படையிலான விளைபொருளையொத்த விளைபொருள் கிடைக்கும்.[5]

வினைவேகவியல்[தொகு]

கிளிக் வேதியியல் வினைகள் உயர் செயல்திறன் மற்றும் அதிக வினைவேகங்கள் கொண்டவையாக அறியப்படுகின்றன. ஒட்டுமொத்த வினை வேகமானது ஆல்க்கீனின் செயலுறு தன்மையைப் பொறுத்து குறிப்பிட்ட அளவு மாறுபடும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. தயோல்-யீன் வினைகளின் வினைவேகவியலை இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்ள நிலைமாறு நிலை மற்றும் வினை வெப்ப அடக்கம் தொடர்பான கணக்கீடுகளும், பல்வேறு ஆல்க்கீன்கள் மற்றும் அவற்றின் தனி உறுப்பு இடைநிலைகளுக்கும் நிகழ்த்தப்பட்டுள்ளன.[6] தயோல் மற்றும் ஆல்கீன் வினை செயல்குழுக்களுக்கிடையே உள்ள மூலக்கூறுகளுக்கிடையிலான இடைவினைகளால் தயாேல்-யீன் பலபடியாக்கல் வினைகள் இன்னும் சிறப்பாக நிகழச் செய்யப்பட முடியும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Posner, Theodor (January 1905). "Beiträge zur Kenntniss der ungesättigten Verbindungen. II. Ueber die Addition von Mercaptanen an ungesättigte Kohlenwasserstoffe". Berichte der Deutschen Chemischen Gesellschaft 38 (1): 646–657. doi:10.1002/cber.190503801106. https://zenodo.org/record/1426120/files/article.pdf. 
  2. 2.0 2.1 Lowe, Andrew B. (2010). "Thiol-ene "click" reactions and recent applications in polymer and materials synthesis". Polym. Chem. 1 (1): 17–36. doi:10.1039/B9PY00216B. 
  3. Nilsson, Camilla (15 February 2008). "Synthesis and thiol-ene photopolymerization of allyl-ether functionalized dendrimers". Journal of Polymer Science Part A: Polymer Chemistry 46 (4): 1339–1348. doi:10.1002/pola.22474. https://archive.org/details/sim_journal-of-polymer-science-part-a-polymer-chemistry_2008-02-15_46_4/page/1339. 
  4. Hoyle, Charles E. (22 February 2010). "Thiol-Ene Click Chemistry". Angewandte Chemie International Edition 49 (9): 1540–1573. doi:10.1002/anie.200903924. 
  5. Nair, Devatha P.; Podgórski, Maciej; Chatani, Shunsuke; Gong, Tao; Xi, Weixian; Fenoli, Christopher R.; Bowman, Christopher N. (14 January 2014). "The Thiol-Michael Addition Click Reaction: A Powerful and Widely Used Tool in Materials Chemistry". Chemistry of Materials 26 (1): 724–744. doi:10.1021/cm402180t. 
  6. 6.0 6.1 Fındık, Volkan; Degirmenci, Isa; Çatak, Şaron; Aviyente, Viktorya (January 2019). "Theoretical investigation of thiol-ene click reactions: A DFT perspective". European Polymer Journal 110: 211–220. doi:10.1016/j.eurpolymj.2018.11.030. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயோல்-யீன்_வினை&oldid=3520911" இலிருந்து மீள்விக்கப்பட்டது