தயாடையசோல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தயாடையசோல்கள் (Thiadiazoles) என்பவை வேதியியலில் உள்ள அசோல் சேர்மங்களின் துணைக் குழு சேர்மங்களாகும். கட்டமைப்பு ரீதியாக இவ்வகைச் சேர்மங்களில் இரண்டு நைட்ரசன் மற்றும் ஒரு கந்தக அணுக்கள் இரண்டு இரட்டைப் பிணைப்புகளால் சேர்க்கப்பட்டு ஓர் அரோமாட்டிக் வளையம் மூலம் ஓர் ஐந்து உறுப்பினர் பல்லின வளையச் சேர்மத்தை உருவாக்குகின்றன.

ஆண்ட்செ-வித்மன் பெயரிடல் முறையைப்பின்பற்றி தயாடையசோல் என்ற பெயர் தோன்றியுள்ளதாகக் கருதப்படுகிறது. கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பல்லின அணுக்களின் அமைவிடத்தைப் பொறுத்து நான்கு விதமான கட்டமைப்புகளில் இச்சேர்மம் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன. இவற்றை ஒன்றிலிருந்து மற்றொரு கட்டமைப்புச் சேர்மமாக உருவாக்க இயலாது. மேலும் இந்த காரணத்தால் இவற்றை இயங்கு சமநிலைகள் என வகைப்படுத்தாமல் கட்டமைப்பு மாற்றியங்கள் என்றுதான் வகைப்படுத்த இயலும். இவை அரிதாக தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு பயன் இவற்றுக்கு உண்டு என்பது அறியப்படவில்லை. இருப்பினும் மருந்தியலில் இவற்றின் கட்டமைப்பின் மையக்கருத்து பொதுவாகக் காணப்படுகிறது [1][2][3]

.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hu, Yang; Li, Cui-Yun; Wang, Xiao-Ming; Yang, Yong-Hua; Zhu, Hai-Liang (2014). "1,3,4-Thiadiazole: Synthesis, Reactions, and Applications in Medicinal, Agricultural, and Materials Chemistry". Chemical Reviews 114 (10): 5572–5610. doi:10.1021/cr400131u. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. பப்மெட்:24716666. 
  2. Jain, Abhishek Kumar; Sharma, Simant; Vaidya, Ankur; Ravichandran, Veerasamy; Agrawal, Ram Kishore (2013). "1,3,4-Thiadiazole and its Derivatives: A Review on Recent Progress in Biological Activities". Chemical Biology & Drug Design 81 (5): 557–576. doi:10.1111/cbdd.12125. பன்னாட்டுத் தர தொடர் எண்:1747-0277.  open access publication - free to read
  3. Wim Dehaen; Vasiliy A. Bakulev; Edward C. Taylor; Jonathan A. Ellman (27 April 2004). The Chemistry of Heterocyclic Compounds, The Chemistry of 1,2,3-Thiadiazoles. John Wiley & Sons. பக். 5–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-65691-3. https://books.google.com/books?id=-XMt2cdjIfAC&pg=PR5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாடையசோல்கள்&oldid=2563672" இலிருந்து மீள்விக்கப்பட்டது