தம்போரா எரிமலை
தம்போரா எரிமலை | |
---|---|
![]() வானத்திலிருந்து காணப்படும் தம்போராவின் 1815 வெடிப்பில் உருவாக்கப்பட்ட பெருவாய் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 2,850 m (9,350 அடி)[1][2] |
புடைப்பு | 2,850 m (9,350 அடி)[1][3] |
பட்டியல்கள் | Ultra Ribu |
புவியியல் | |
அமைவிடம் | சும்பவா, இந்தோனேசியா |
பகுதி | ID |
நிலவியல் | |
பாறையின் வயது | 57,000 ஆண்டுகள் |
மலையின் வகை | சுழல்வடிவ எரிமலை |
கடைசி வெடிப்பு | 1967 ± 20 ஆண்டுகள்[1] |
தம்போரா எரிமலை (அல்லது தம்போரோ) (இந்தோனேசிய மொழி: Gunung Tambora) இந்தோனேசியாவின் சும்பவா தீவில் அமைந்த சுழல்வடிவ எரிமலை. தம்போராவின் வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் கடற் புவியோட்டின் கீழமிழ்தலின் காரணமாக தம்போரா மலை முளைத்தது. 1815ஆம் ஆண்டுக்கு முன்பு 4300 மீட்டர் உயரம் அடைந்தது.
1815ஆம் ஆண்டில், ஏப்ரல் 10ஆம் தேதி அன்று தம்போரா எரிமலை வெடித்துள்ளது. எரிமலை வெடிப்புத்தன்மை எண்ணில் ஏழு என்று அறியப்பட்ட இவ்வெடிப்பு, உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஆகும். இவ்வெடிப்பின் படி நேரடியாக 11,000-12,000 மக்கள் உயிரிழந்தனர். தம்போராவிலிருந்து வானத்தில் பூசிய சாம்பலின் காரணமாக, வெய்யில் இல்லாமல் வேளாண்மை உற்பத்தி குறைந்து மேலும் 60,000 மக்கள் பட்டினி, நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். உலக முழுவதிலும் தம்போராவின் உமிழ்வால் நீண்ட கால குளிர் ஏற்பட்டது. 1815 ஆண்டு "கோடைகாலம் இல்லாத ஆண்டு" என்று அறியப்பட்டு வந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Tambora". Global Volcanism Program. Smithsonian Institution. Archived from the original on 2013-02-20. Retrieved 2014-04-25.
- ↑ 2.0 2.1 "Mountains of the Indonesian Archipelago". PeakList. PeakList.org. Retrieved 20 June 2012.
- ↑ "Gunung Tambora". Peakbagger.com. Retrieved 1 May 2009.
வெளி இணைப்புகள்
[தொகு]
- "Indonesia Volcanoes and Volcanics". Cascades Volcano Observatory. USGS. Retrieved 19 March 2006.
- "Tambora, Sumbawa, Indonesia". Volcano World. Department of Geosciences at Oregon State University. Archived from the original on 2017-06-17. Retrieved 2014-04-25.
- "Informative website about Tambora volcano".