தமிழ்நாடு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மருத்துவ முறைகளில் ஒன்றான இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் குறித்த கல்விகளை அளிக்கும் கல்லூரிகள் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன. இக்கல்லூரிகளில் இளம்நிலை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் (ஆங்கிலம்: Bachelour of Naturopathy and Yogic Sciences) எனும் பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலான, சென்னை அரும்பாக்கத்தில் ஆண்டுக்கு 10 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட அரசினர் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி உள்ளது. இது தவிர உதகமண்டலத்தில் ஆண்டுக்கு 60 மாணவர் சேர்க்கைக்கான இடங்களைக் கொண்ட ஒரு சுயநிதிக் கல்லூரி, சேலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் எனுமிடத்திலும் இரு சுயநிதிக் கல்லூரிகள் என மூன்று சுயநிதிக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் அரசுக் கல்லூரியில் ஆண்டுக்கு 10 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 140 மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் என மொத்தம் 150 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன.