தமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்
Appearance
தமிழ்நாடு அரசு ஊனமுற்றவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கை, கால் ஊனமுற்றவர்
[தொகு]ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தோரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உதவிக்கான தகுதிகள்
[தொகு]- தம்பதிகளில் ஒருவர் கை, கால் ஊனமுற்றவராக இருத்தல் வேண்டும்.
- பிறவியிலேயே ஊனமுற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- குடும்பத்தின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.
உதவித்தொகை
[தொகு]- ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 காசோலையாகவும் வழங்கப்படும்.
பார்வையற்றவர்
[தொகு]பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உதவிக்கான தகுதிகள்
[தொகு]- தம்பதிகளில் ஒருவர் பார்வையற்றவராக இருத்தல் வேண்டும்.
- பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்ளும் பார்வையுடையவரின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.
உதவித்தொகை
[தொகு]- ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.
பேசும் திறனற்ற காது கேளாதவர்
[தொகு]பேசும்திறனற்ற காது கேளாதவர்களைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
உதவிக்கான தகுதிகள்
[தொகு]- திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் 100 சதவிகிதம் பேசும் திறனற்று காதுகேளாதவராக இருத்தல் வேண்டும்.
- 35 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு வருமான வரம்பு எதுவுமில்லை.
உதவித்தொகை
[தொகு]- ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க
[தொகு]மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மறுவாழ்வு அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிரப்பி, தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் இந்த விண்ணப்பப் படிவங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட உதவித்தொகைகளை வழங்குகிறார்.