உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழர் விடுதலைக் கூட்டணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தமிழர் ஐக்கிய முன்னணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி
Tamil United Liberation Front
ද්‍රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ
தலைவர்வீரசிங்கம் ஆனந்தசங்கரி
நிறுவனர்சா. ஜே. வே. செல்வநாயகம்,
கணபதி காங்கேசர் பொன்னம்பலம்,
சௌமியமூர்த்தி தொண்டமான்
செயலாளர்கே. கே. கனகராஜா
தொடக்கம்மே 4, 1972 (1972-05-04)
இணைந்தவைஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
முன்னர்தமிழர் விடுதலைக் கூட்டணி
தலைமையகம்5/3ஏ விஜயாபா மாவத்தை, களுபோவிலை, தெகிவளை
கொள்கைதமிழ் தேசியம்
தேர்தல் சின்னம்
உதய சூரியன்
இலங்கை அரசியல்

1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

1976 ல் இவ்வமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி (சிங்களம்: ද්රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ ஆங்கிலம்: Tamil United Liberation Front) எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன், வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மாநாட்டில், "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்று பரவலாக அறியப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது.[1][2][3]

1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார்.

70 களின் ஆரம்பத்திலிருந்தே சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்த தீவிரவாத இளைஞர்கள், படிப்படியாகப் பலம் பெற்றுவந்தார்கள். அதனால் 1983க்குப் பின்னர் தமிழர் அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Result of Parliamentary General Election 1977" (PDF). Department of Elections, Sri Lanka.
  2. "Result of Parliamentary General Election 1989" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 4 March 2009.
  3. D. B. S. Jeyaraj (1 January 2006). "The benign parliamentarian from Batticaloa". TransCurrents. Archived from the original on 10 November 2009.{{cite web}}: CS1 maint: unfit URL (link)