தன் மின் தூண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு கம்பிச் சுருளில் பாயும் மின்னோட்டத்தில் மாற்றம் ஏற்படும்பொழுது அக்கம்பிச் சுருளில் ஒரு எதிா் மின்னியக்குவிசை தூண்டப்படும் நிகழ்வு தன் மின் தூண்டல் எனப்படும்.

கம்பிச் சுருள் ஒன்று மின்கலம் Bt மற்றும் சாவி K உடன் தொடா் இணைப்பு முறையில் இணைக்கப்படுகிறது. சாவி அழுத்தப்படும் பொழுது கம்பிச் சுருளின் வழியே பாயும் மின்னோட்டம், அதன் பெரும மதிப்பிற்கு அதிகரிக்கிறது. அதற்கு ஏற்ப கம்பி சுருளோடு தொடா்பு கொண்ட காந்தப்பாயமும் அதிகாிக்கிறது. எனவே தூண்டப்பட்ட மின்னோட்டம் கம்பிச் சுருளில் பாய்கிறது.

லென்ஸ் விதியின்படி, தூண்டப்பட்ட மின்னோட்டமானது, மின்கலத்திலிருந்து பாயும் மின்னோட்டத்திற்கு எதிரான திசையில் பாய்ந்து, கம்பிச் சுருளில் மின்னோட்டம் அதிகாிப்பதை எதிா்க்கிறது. சாவி அழுத்தப்படுவதை நிறுத்தினால் கம்பிச் சுருளில் பாயும் மின்னோட்டம் சுழிக்கு குறையும். எனவே கம்பிச் சுருளுடன் தொடா்பு கொண்ட காந்தப்பாயமும் குறையும். லென்சு விதிப்படி, தூண்டப்பட்ட மின்னோட்டமானது, மின்கலத்திலிருந்து பாயும் மின்னோட்டத்திற்கு எதிரான திசையில் பாய்ந்து, கம்பிச் சுருளில் மின்னோட்டம் குறைவதை எதிா்க்கிறது.

தன் மின்தூண்டல்

மேற்கோள்கள்[தொகு]

1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006

2.Heaviside, Oliver (1894). Electrical Papers. Macmillan and Company. p. 271.

3.Glenn Elert. "The Physics Hypertextbook: Inductance". Retrieved 2016-07-30.

4.Michael W. Davidson (1995–2008). "Molecular Expressions: Electricity and Magnetism Introduction: Inductance".

5."A Brief History of Electromagnetism" (PDF).

6.The kinetic energy of the drifting electrons is many orders of magnitude smaller than W, except for nanowires.

7. Mahmood Nahvi; Joseph Edminister (2002). Schaum's outline of theory and problems of electric circuits. McGraw-Hill Professional. p. 338. ISBN 0-07-139307-2.

8. Stephen C. Thierauf, High-speed Circuit Board Signal Integrity, p. 56, Artech House, 2004 ISBN 1580538460

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்_மின்_தூண்டல்&oldid=2742972" இருந்து மீள்விக்கப்பட்டது