தன்ஸிம் அல்-காயிதா ஃபி பிலாத் அல்-மஹ்ரிப் அல்-இஸ்லாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தன்ஸிம் அல்-காயிதா ஃபி பிலாத் அல்-மஹ்ரிப் அல்-இஸ்லாமி[1] (அரபி: تنظيم القاعدة في بلاد المغرب الإسلامي‎ Tanẓīm al-Qā‘idah fī Bilād al-Maghrib al-Islāmī, ஆங்கிலம்: Al-Qaeda in the Islamic Maghreb (AQIM)) ஓர் ஆயுதம் தாங்கிய இஸ்லாமிய தீவிரவாதக் குழு ஆகும். இது தற்போது அரசுக்கு எதிரானச் செயல்களைச் செய்து வருகிறது.

வரலாறும் நோக்கமும்[தொகு]

இந்த அமைப்பானது ஸலாபாத் மற்றும் பிரசங்கம் மற்றும் சண்டை (Preaching and Combat) ஆகிய இரு குழுக்கள் இணைந்து உருவானது ஆகும். இவ்வமைப்பானது அல்ஜீரியாவைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறது. இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் அல்ஜீரிய அரசை அகற்றிவிட்டு இஸ்லாமிய அரசை அமைக்க வேண்டும் என்பதாகும்.[2] இக்குழுவானது ஐரோப்பிய, ஸ்பானிய, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நிலைகளைத் தாக்குவதை தனது முக்கிய நோக்கமாக அறிவித்துள்ளது. இவ்வமைப்பின் உறுப்பினர்களாக அல்ஜீரியர்களும், சகாரா பகுதியைச் சேர்ந்தவர்களும் மேலும் மொராக்கோவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.[3][4][5][6][7]

அமைப்பின் மீதான தடை[தொகு]

இவ்வமைப்பை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை தடை செய்துள்ளன. இவ்வமைப்பிற்கு ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் இயங்கிவரும் அல் சபாப் தீவிரவாதக் குழுவுடன் தொடர்பு உள்ளது.[8] இந்த அமைப்பு பணத்திற்காக கடத்தல் செயல்களைச் செய்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இதன் மூலம் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டியுள்ளது.[9]

தாக்குதல்கள்[தொகு]

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த இயக்கத்தின் முக்கியத் தளபதிகளுள் ஒருவரான முக்தர் பெல்முக்தர் தனது வீரர்களுடன் பிரிந்து சென்று தாகுதலை நடத்தினார்.[10][11] பின்னர் அவர் இத்தாக்குதலை அல் காயிதாவிற்காக செய்ததாகச் சொன்னார். பின்னர் பிரான்ஸ் நடத்திய பதிலடித் தாக்குதலில் தன்ஸிம் அல்-காயிதா ஃபி பிலாத் அல்-மஹ்ரிப் அல்-இஸ்லாமியின் மற்றொரு தளபதியான அப்துல்ஹமீத் அபு ஸீத் என்பவரும் முக்தர் பெல்முக்தரும் முறையே 25 பிப்ரவரி 2013 மற்றும் 2 மார்ச் 2013 அன்று கொல்லப்பட்டதாக பிரான்ஸ் அறிவித்தது.[12][13] அப்துல்ஹமீத் அபு ஸீத் கொல்லப்பட்டதை தன்ஸிம் அல்-காயிதா ஃபி பிலாத் அல்-மஹ்ரிப் அல்-இஸ்லாமி உறுதிப்படுத்தியது.[14] அமெரிக்க அரசு 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முக்தர் பெல்முக்தர் தலைக்கு பரிசு அறிவித்ததைத் தொடர்ந்து முக்தர் பெல்முக்தர் இன்னும் கொல்லப்படவில்லை என அறியமுடிகிறது.[15][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. Watson, Bob. "Algeria blasts fuel violence fears", BBC News, 11 April 2007. Retrieved 22 April 2007.Jean-Pierre Filiu, "Local and global jihad: Al-Qa'ida in the Islamic Maghrib", The Middle East Journal,Vol.63, spring 2009.
  2. "Algeria". CIA. Archived from the original on 30 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. http://minerva.marinecorpsuniversity.org/wp-content/uploads/2011/12/Al_Qaida_Body_LOWRES2.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Dario Cristiani; Riccardo Fabiani (April 2011). "Al Qaeda in the Islamic Maghreb (AQIM): Implications for Algeria's Regional and International Relations" (PDF). IAI Working Papers. Archived from the original (PDF) on 28 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Morocco dismantles AQIM cell Magharebia, 26 December 2012
  6. Morocco dismantles terror recruitment cell Magharebia, 27 November 2012
  7. Morocco nabs members of AQIM cell Upi.com, 5 January 2011
  8. "African Terrorist Groups Starting to Cooperate, U.S. Says". Bloomberg L.P.. 25 June 2012. http://www.businessweek.com/news/2012-06-25/african-terrorist-groups-starting-to-cooperate-u-dot-s-dot-says. 
  9. Corera, Gordon (14 January 2013). "Islamists pose threat to French interests in Africa". BBC. http://www.bbc.co.uk/news/world-africa-21018675. பார்த்த நாள்: 20 January 2013. 
  10. Aronson, Samuel (28 April 2014). "AQIM's Threat to Western Interests in the Africa’s Sahel". Combating Terrorism Center Sentinel (CTC), West Point இம் மூலத்தில் இருந்து 13 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140513133524/https://www.ctc.usma.edu/posts/aqims-threat-to-western-interests-in-the-sahel. 
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.
  12. Padire, Dany (2 March 2013). "Mokhtar Belmokhtar Killed?". The Huffington Post. http://www.huffingtonpost.com/2013/03/02/mokhtar-belmokhtar-killed-dead-dies-chad_n_2798138.html. பார்த்த நாள்: 2 March 2013. 
  13. "Al Qaeda confirms Abou Zeid killed in Mali". Inquirer. AFP (Nouakchott). 4 March 2013. http://globalnation.inquirer.net/66673/al-qaeda-confirms-abou-zeid-killed-in-mali-report. பார்த்த நாள்: 10 March 2013. 
  14. http://www.france24.com/en/20130616-aqim-confirms-zeid-died-fighting-mali-al-qaeda/
  15. http://abcnews.go.com/blogs/headlines/2013/06/alive-after-all-u-s-offers-5m-for-mokhtar-belmokhtar/
  16. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-25. பார்க்கப்பட்ட நாள் 2014-06-05.