தன்நிறப்புரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிகரிணைக் குறுமவகம், தன்நிறப்புரி அல்லது தன்னிறமூர்த்தம் (autosome) அல்லது ஒப்பிணைக் குறுமவகம் (Analogous Chromosome) என்பது பாலினம் சாராத உடலக் குறுமவகம் (நிறப்புரி) ஆகும்.[1] இது பாலினம் சார்ந்த மாற்றிணைக் குறுமவகத்தில் (Allosome) இருந்து வேறுபட்டதாகும்.[2] இவை இருபண்பக உயிர்க்கலத்தில் ஒத்த வடிவம் உள்ள உறுப்புகளைக் கொண்டமையும். ஆனால், இருபண்பக உயிர்க்கலத்தில் உள்ள மாற்றிணைக் குருமவகத்தின் இணைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு அதன்வழியாகப் பாலினத்தை அறுதியிடுகின்றன. நிகரிணைக் குறுமவகங்களில் உள்ள மொத்த மரபன்களும் கூட்டாக நிகர்மரபன் (atDNA) அல்லது ஒப்புமரபன் (auDNA) எனப்படுகின்றன.[3]

மனிதரை எடுத்துக் கொண்டால், 22 சோடி தன்நிறப்புரிகளும், ஆண், பெண் வேறுபாட்டைத் தீர்மானிக்கும் ஒரு சோடி பால்குறி நிறப்புரிகளுமாக மொத்தம் 46 நிறப்புரிகளைக் கொண்ட மடியநிலை மரபணுத்தொகை காணப்படுகின்றது. தன்நிறப்புரி சோடிகள் எண்களுடன் (மனிதர்களில் 1–22) தோராயமாக அடிப்படை சோடிகளாக அவற்றின் அளவுகளின் வரிசையில் பெயரிடப்பட்டுள்ளன, அதே சமயம் பால்குறி நிறப்புரிகள் அவற்றின் எழுத்துக்களால் பெயரிடப்பட்டுள்ளன.[4] மாறாக, பால்குறி நிறப்புரி சோடி பெண்களில் இரண்டு X நிறப்புரிகள் அல்லது ஆண்களில் ஒரு X, ஒரு Y நிறப்புரிகள் காணப்படுகின்றன. வழக்கத்திற்கு மாறான XYY, XXY, XXX, XXXX, XXXXX அல்லது XXYY சேர்க்கைகள், பொதுவாக வளர்ச்சியில் இயற்கைக்குப் புறம்பான அமைப்புகளை ஏற்படுத்தும்.

மனிதரில் உள்ள நிறப்புரிகள்
பெண் ஆண்
ஆணிலும், பெண்ணிலும் ஒவ்வொரு தன்நிறப்புரியிலும் இரு பிரதிகள் இருக்கும். அவை 1-22 நிறப்புரிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. 23 ஆவது நிறப்புரி பால்குறி நிறப்புரியாக இருப்பதுடன் ஆணிலும், பெண்ணிலும் வெவ்வேறாக இருக்கும். பெண்ணில் இரு பிரதிகளைக் கொண்ட X நிறப்புரியும், ஆணில் தனியான ஒரு X நிறப்புரியும், தனியான ஒரு Y நிறப்புரியும் காணப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்நிறப்புரி&oldid=3739193" இருந்து மீள்விக்கப்பட்டது