தனுஷ்கோடி ராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தனுஷ்கோடி ராமசாமி (Danushkodi Ramasamy) (1945 - 2005) இந்தியவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார். அவரது படைப்புகள் பொதுவுடைமை சிந்தனைகளாலும், தொழிலாளர்களின் வலநிலைகளைச் சித்தரிப்பதாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு கலையுலக பெருமன்றம் என்ற இலக்கிய அமைப்பின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

தனுஷ்கோடி ராமசாமி, தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தின் சாத்தூருக்கு அருகில் உள்ள கே. மேட்டுப்பட்டியில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பள்ளிக்கூடஆசிரியராக இருந்தார். கலை மற்றும் கல்வியியலில் முதுகலைப் பட்டம் பெற்று சாத்தூரில் உள்ள ஆயிர வைசியா உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். தன்னுடைய இலக்கிய நடவடிக்கைகளுக்கு இவ்வாசிரியர் பணி தலையீடாக உணர்ந்தால் அப்பணியை துறந்தார். மீண்டும் அதே பள்ளியில் முதுகலை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இவருடைய இளமைக்காலத்தில் தனித்தமிழ் இயக்கம் மற்றும் காந்தியக் கொள்கைகளின் ஆதரவாளராகவும் அதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். பின்னர் அவர் மார்க்சியத்தின் ஆதரவாளராக மாறினார். இவரது முதல் சிறுகதை சிம்ம சொப்பனம் 1978 ஆம் ஆண்டில் வெளிவந்தது. எழுத்தாளராக இருந்த போது, இவர் பல சிறு கதைகள் மற்றும் நாவல்களை எழுதினார். 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தோழர் என்ற நாவல் இவரது சிறந்த படைப்பு ஆகும். இவரது சிறுகதைகள் ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தன. 1990 இல், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வெளியீட்டு அங்கமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இவருக்கு சிறந்த தமிழ் சிறுகதை எழுத்தாளர் என்ற விருது வழங்கியது. 1992 இல், தீம்தரிகிட என்ற இவரது நாவலுக்காக லில்லி தேசிகமணி நினைவு விருதினைப் பெற்றார். 1991 ஆம் ஆண்டில், ஆனந்த விகடன் வைர விழா சிறுகதை போட்டியில் வெற்றி பெற்றார். அக்னி சுபமங்களா நடத்திய 94 வது சிறுகதை போட்டியில் முதல் பரிசினை வென்றார். தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றத்தின் மாநில செயலாளராக பணியாற்றினார். பொது செயலாளராக இருந்தபோது நீண்டகாலமாக நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2005 ஆம் ஆண்டு நவம்பர் 24 அன்று காலமானார்.[1][2][3]

நூற்பட்டியல்[தொகு]

 • சிம்ம சொப்பனம் (1978)
 • நாரனம்மா (1983)
 • தோழர் (1985)
 • தீம்தரிகிட(1992)
 • வாழ்க்கை நெருப்பு(2000)
 • பெண்மை என்றும் வாழ்க
 • நிழல் என்றும் ஒரு கவிதை[4]

ஆளுமை[தொகு]

ராமசாமி அவர்களின் கதைகள் மற்றும் நாவல்கள் கன்னடம், மலையாளம் மற்றும் வங்காள மொழி போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவரது மரணத்திற்குப் பின்னர் அவரது நினைவாக சாத்தூரில் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்த தொண்டு நிறுவனம் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த தமிழ் சிறு கதை எழுத்தாளர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இலக்கியக் கூட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான இலக்கியப் பயிலரங்குகள் போன்றவை நடைபெற்று வருகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Danushkodi Ramasamy dead". தி இந்து. தி இந்து (26 November 2005). மூல முகவரியிலிருந்து 25 மே 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 January 2010.
 2. 2.0 2.1 "Dhanushkodi Ramasamy trust webpage" (Tamil). மூல முகவரியிலிருந்து 11 மார்ச் 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 January 2010.
 3. "Danushkodi Ramasamy Obituary" (Tamil). Thinnai.com (2 December 2005). பார்த்த நாள் 29 January 2010.
 4. "Danushkodi Ramasamy memorial meeting" (Tamil). Thinnai.com (23 December 2005). பார்த்த நாள் 29 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஷ்கோடி_ராமசாமி&oldid=3247228" இருந்து மீள்விக்கப்பட்டது