தனிப்பட்ட தேர்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐக்கிய இராச்சியம் மற்றும் தமிழ்நாடு தேர்வு முறையில் தனிப்பட்ட தேர்வர் (இலங்கை வழக்கு: தனிப்பட்ட பரீட்சார்த்தி)[1] (private candidate) என்பவர் பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவராக இல்லாத ஒருவர் அரசுப் பொதுத் தேர்வுகளை எழுதுபவர்கள் ஆவர். இவர்கள் சுயமாகவோ அல்லது தனியார் பயிற்சி மையங்களின் மூலம் பயிற்சி பெற்று இத்தகைய தேர்வினை எழுதுவார்கள். தமிழ்நாட்டில், பள்ளி கல்லூரிகளில் பயிலும் மற்ற மாணவர்கள் எழுதும் அனைத்துப் பாடங்களையும் எழுதுவார்கள். இவர்கள் வழிகாட்டும் மையத்தின் (குறிப்பிட்ட பள்ளிகள்) மூலம் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.[2]

பரவலாக அறியப்படும் ஆங்கில தேர்வு வாரியங்கள் - AQA, OCR, மற்றும் Edexcel - ஆகியன தனிப்பட்ட தேர்வர்களை ஏற்றுக்கொள்கின்றன. CAIE தனிப்பட்ட தேர்வர்களையும் ஏற்றுக்கொள்கிறது. AQA தனிப்பட்ட தேர்வர்களை ஐக்கிய இராச்சியத்திற்கு வெளியே தேர்வு எழுத அனுமதிப்பதில்லை.

வடக்கு அயர்லாந்தின் CCEA இத்தகைய மாணவர்களை வெளி தேர்வர் என்ற பொருட்பட அழைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பரீட்சாத்தியின் / மாணவரின் பிரகடனம் (PDF)
  2. "tndge faq". https://dge.tn.gov.in/docs/faq_english.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனிப்பட்ட_தேர்வர்&oldid=3841949" இலிருந்து மீள்விக்கப்பட்டது