தட்டக்கல் பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தட்டக்கல் பாறை ஓவியங்கள் என்பன, கிருட்டிணகிரி மாவட்டத்தின் போச்சம்பள்ளியச் சேர்ந்த நாகரசம்பள்ளிக்கு அண்மையில் உள்ள தட்டக்கல் என்னும் இடத்தில் உள்ள பாறையொன்றில் காணப்படும் பழங்கால ஓவியங்கள் ஆகும்.[1] இப்பகுதியில் பல பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய புதைகுழிகள் காணப்படுகின்றன. [2]

ஓவியங்கள்[தொகு]

இவ்வோவியங்களில் பல்வேறு செயற்பாடுகளைச் செய்யும் மனித உருவங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள ஒரு ஓவியத்தில் மனித உருவங்கள் நின்ற, அமர்ந்த, கிடந்த நிலைகளில் வரையப்பட்டுள்ளன. இவை வெண்ணிறத்தில் வரையப்பட்டுள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. பவுன்துரை, இராசு., 2001, பக். 113.
  2. Dayalan, D.
  3. பவுன்துரை, இராசு., 2001, பக். 113.

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.
  • Dayalan, D., Rock Art in Tamilnadu and its Archaeological Perspective.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]