தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் காணப்படும் குகைச் சுவர்களிலும், பிற பாறை மேற்பரப்புக்களிலும், பழங்கால மனிதர்களால் வரையப்பட்ட தொன்மையான ஓவியங்களைக் குறிக்கும். அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் பரவலாகக் கண்டுபிடிக்கப்படும் பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டின் தொன்மையைக் குறிக்கும் சான்றுகளாக அமைகின்றன. இது மட்டுமன்றி, தமிழ்நாட்டில் தொல்பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் கலை ஈடுபாடு, சமூக வாழ்க்கை போன்றவற்றை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களையும், இவ்வோவியங்கள் வழங்குகின்றன.

தமிழ்நாட்டில் அதன் தொன்மையைக் காட்டும் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, இந்தியாவிலேயே மிக அதிகமான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. எனினும், 1970 வரை தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பாறை ஓவியங்கள் எதுவும் இல்லை என்ற நிலையே நிலவியது. 1970களில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மல்லபாடியில் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியம் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக அமைந்தது. தொடர்ந்து, தமிழ்நாட்டின் 30க்கு மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1]

தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள்[தொகு]

தமிழகத்தில் பாறை ஓவியங்கள் பற்றிய ஆய்வு கி.பி.1980க்குப் பின்னரே தோன்றியது. அதன் பயனாகத் தென் ஆற்காடு, வட ஆற்காடு, தருமபுரி, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் பாறை ஓவியங்கள் உள்ள இடங்கள்[தொகு]

 1. கீழ்வாளை
 2. செத்தவரை
 3. முத்துப்பட்டி
 4. அணைப்பட்டி
 5. திருமலை
 6. சிறுமலை
 7. காமயகவுண்டன்பட்டி
 8. வெள்ளருக்கம் பாளையம்
 9. மல்லபாடி
 10. பாடியாந்தல்
 11. சென்னராயன்பள்ளி
 12. ஆலம்பாடி
 13. கொள்ளூர்
 14. மகாராசாக்கடை
 15. கொணவக்கரை
 16. சீகூர்
 17. மல்லசமுத்திரம்
 18. முழுதிப்பாடி
 19. ஓதிக்குப்பம்
 20. தட்டக்கல்
 21. குருவிநாயனபள்ளி
 22. முடிப்பிநாயனபள்ளி
 23. மூங்கில்புதூர்
 24. மயிலாடும்பாறை
 25. ஒப்பதவாடி
 26. தாளாப்பள்ளி
 27. பெருமூங்கில்
 28. வெள்ளிரிக்கோம்பை
 29. வணங்கப்பழம்
 30. மோயர் பள்ளத்தாக்கு

இராயக்கோட்டை #கெட்டூர்

மேற்கண்ட பாறை ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களின் சூழல்களை வைத்து, தமிழக வரலாற்றுக்கு முந்தைய கால பாறை ஓவியங்களின் சிறப்பியல்புகளை ஆராயலாம்.

தமிழ்நாட்டுப் பாறை ஓவியங்களின் காலம்[தொகு]

உலகின் பிற பகுதிகளில் 30,000 ஆண்டுகளுக்கு முந்தியது வரையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாறையோவியங்கள் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை அல்ல.[2] ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள் பிற்பட்ட காலத்துக்கு உரியவையாகக் கருதப்படுகிறது. ஆர். வெங்கட்ராமன் போன்ற சில ஆய்வாளர்கள் தமிழ்நாட்டுப் பாறையோவியங்களிற் சில வரலாற்றுக்கு முந்திய காலத்துக்கு உரியவை எனக் குறிப்பிட்டிருந்தாலும், வேறு சிலர் இதை மறுத்து, வரலாற்றுக்கு முந்தியகாலப் பாறையோவியங்கள் எதுவும் இன்னும் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்படவில்லை என்கின்றனர்.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

 1. Rock Art பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Department of Archaeology
 2. பவுன்துரை, இராசு., பக். 41

மூலம்[தொகு]

 • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
 • துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.
 • Kannan, R., Manual on Conservation and Restoration of Monuments, Government Museum, Chennai, 2007. ஆங்கிலம், தமிழ்
 • Kannan, R., Monograph on Rock Art and Cave Art, Chennai Museum - 2003. ஆங்கிலம்.

வெளியிணைப்புக்கள்[தொகு]