உள்ளடக்கத்துக்குச் செல்

தடித்தோலணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய தடித்தோலணு
நீண்ட தடித்தோலணு :
Dionysia kossinskyi தாவரத்தின் இலையோரம்
நீண்ட தடித்தோலணு :
Dionysia paradoxa தாவரத்தின் இலை

தடித்தோலணு (ஆங்கிலம்:Sclereid) என்பது தடித்த மேற்றோலைக் கொண்ட தாவர உயிரணுக்களைக் குறிக்கிறது. இவைகள் தாவரத்தின் ஸ்கிளீரன்கைமா என்ற எளிய உயிரணுத்தொகுதியின் இருவகைகளில் ஒன்றாகும். மற்றொன்று தாவரத்தோல் நார் என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான தாவரத்தின் தோலில் இவைகள் காணப்படுகின்றன.[1]

தோற்றம்[தொகு]

ஒரு தாவரத்தில் எண்ணிக்கையில் பெருகும் உயிரணுக்கள் வேறுபாடடைந்து, பலவகையான நிலைத்த உயிரணுத்தொகுதிகளை உண்டாக்குகின்றன. இத்தகைய உயிரணுக்கள் பகுப்படையும் திறனை நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இழக்கின்றன. இந்நிலைத்த உயிரணுத்தொகுதியில் காணப்படும் உயிரணுக்கள், உருவத்தாலும், இயல்பாலும் வேறுபடுகின்றன. அவ்வேறுபாட்டினைப் பொருத்து, அவை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

  • எளிய உயிரணுத்தொகுதி (அ) எளியத்திசு : ஒத்த அமைப்பு மற்றும் செயல்களையுடைய செல்களால் ஆனவை இது மூன்று வகைப்படும். அவை பாரன்கைமா(Parenchyma), கோலன்கைமா (Collenchyma), ஸ்கிளீரன்கைமா(Sclerenchyma) என்பனவாகும்.
  • கூட்டு உயிரணுத்தொகுதி (அ) கூட்டுத்திசு : வேறுபட்ட அமைப்பு உடையவை. ஆனால், ஒத்த பணியை மேற்கொள்ளுபவை ஆகும். இவை இரண்டு வகைப்படும். காழ் (xylum), உரியம் (Phloem)

இயல்புகள்[தொகு]

Pyrus communis
பேரிக்கனி
Crotalaria incana
Pisum sativum
பட்டாணி

இவைகள் இறந்த உயிரணுக்கள் ஆகும். வடிவம் மற்றும் செல்சுவர் தடிப்பு ஆகிய பண்புகளின் அடிப்படையில் பல்வேறு வகையான தடித்தோலணுகள் காணப்படுகின்றன. உயிரணுச்சுவரில் 'லிக்னைன்'(Lignin) என்ற வேதிப்பொருள் பலஅடுக்குகளாக படிவதன் காரணமாக செல்சுவர் மிகவும் தடித்து காணப்படுகிறது. அதனால் செல்களின் உயிரணு அறை (Lumen) மிகவும் குறுகலாக உள்ளது. செல்சுவரில் காணப்படும் குழிகள் எளியவையாகவோ அல்லது கிளைத்தவையாகவோ (Branched Pits) காணப்படுகின்றன.

வகைகள்[தொகு]

  1. கல்உயிரணு : இவைகள் பெரும்பாலும் சமஅளவு உடையவைகளாக் காணப்படுகின்றன. ஆனால் சில தாவரங்களில் நீண்டு காணப்படுகின்றன. விதையுறையின் கடினத் தன்மைக்கு, இவைகளே காரணமாக உள்ளன. சமஅளவுடைய இவைகள், கல்உயிரணுக்கள் (brachysclereids) எனப்படுகின்றன. இவை பட்டை. தண்டின் நடுப்பகுதி, புறணி. தடித்த கனி, உள்ளுறை மற்றும் சில கனிகளின் சதைப் பகுதியில் காணப்படுகின்றன. (எ.கா.) பேரிக்கனியின் தளத்திசுப் பகுதி.
  2. கோல்உயிரணு : இவைகள் கோல வடிவத்தில் நீண்டு காணப்படுகின்றன. எனவே கோல்உயிரணுக்கள் (macrosclereids) என அழைக்கப் படுகின்றன. இவை விதை வெளியுறையில் காணப்படுகின்றன. (எ.கா.) குரோட்டலேரியா.
  3. எலும்புஉயிரணு: இவைகளின் முனைப்பகுதிகள் அகன்ற கோல்வடிவத்தில் எலும்பு போல காணப்படுகின்றன. எனவே, இவைகளை எலும்பு உயிரணுக்கள் (osteosclereids) என அழைக்கப்படுகின்றன. ( எ.கா.) பட்டாணியின் விதை உறை

மேற்கோள்கள்[தொகு]

  1. Evert, Ray F; Eichhorn, Susan E. Esau's Plant Anatomy: Meristems, Cells, and Tissues of the Plant Body: Their Structure, Function, and Development. Publisher: Wiley-Liss 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471738435

மேலும், விவரங்கள்[தொகு]

  • Mauseth, James D. (2012). Botany : An Introduction to Plant Biology (5th ed.). Sudbury, MA: Jones and Bartlett Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4496-6580-7. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Moore, Randy; Clark, W. Dennis; and Vodopich, Darrell S. (1998). Botany (3rd ed.). McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-697-28623-1.
  • Chrispeels MJ, Sadava DE. (2002) Plants, Genes and Crop Biotechnology. Jones and Bartlett Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-1586-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=தடித்தோலணு&oldid=2746125" இலிருந்து மீள்விக்கப்பட்டது