உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் முகப்பு

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் உள்ள விநாயகர் கோயில்களில் ஒன்றாகும்.

அமைவிடம்

[தொகு]

இக்கோயில் தஞ்சாவூர்-வல்லம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது. [1] தஞ்சாவூரில் உள்ளோரும் இக்கோயிலுக்கு வருவோரும் இவ்விநாயகரை பிள்ளையார்பட்டி விநாயகர் என்றே கூறுகின்றனர்.

அமைப்பு

[தொகு]
விமானம்

இக்கோயிலின் வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து கருவறைக்குச் செல்வதற்கு முன்பாக வலது புறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் மூலவராக விநாயகர் அமர்ந்த நிலையில் உள்ளார். மூலவருக்கு முன்பாக வலது புறம் மற்றொரு விநாயகர் உள்ளார். இடது புறம் லிங்கம் உள்ளது. திருச்சுற்றில் கால பைரவர் சன்னதி உள்ளது. கோஷ்டத்தில் நாகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோரின் சிலைகளும், விஷ்ணு மற்றும் பிரம்மாவின் ஓவியங்களும் உள்ளன.

விழாக்கள்

[தொகு]

மாதந்தோறும் வருகின்ற சங்கடகர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி ஆகியவை இக்கோயிலில் நடைபெறுகின்ற விழாக்களாகும். கார்த்திகை சோம வாரத்தில் விபூதி அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோயில் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. காரைக்குடிக்கு அருகிலுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரைப் போல இவரை வழிபட்டால் சர்வ மங்களமும் கிடைக்குமென்று மக்கள் நம்புகின்றனர். [1]

மேற்கோள்கள்

[தொகு]