தங்கச் சுருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1604ஆம் ஆண்டு நூலின் முதல் பக்கம்

தங்கச் சுருக்கம் (Altan Tobchi)[1] என்பது ஒரு வரலாற்று நூல் ஆகும். இது 17ஆம் நூற்றாண்டில் இலவ்சந்தன்சன் என்பவரால் மங்கோலிய மொழியில் எழுதப்பட்டது. இந்நுலின் முழுத் தலைப்பு பண்டைய கான்களால் நிறுவப்பட்ட ஆட்சிக்கலையின் கோட்பாடுகளின் தங்கச் சுருக்கம் இதனுள் உள்ளடங்கியுள்ளது என்பதாகும். இந்நூல் மங்கோலியர்களின் இரகசிய வரலாறுக்குப் பிறகு மங்கோலிய மொழியின் இரண்டாவது கண்ணியமான வரலாற்று நூல் மற்றும் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது. உண்மையில் இந்நூல் இரகசிய வரலாற்றின் 282 பகுதிகளில் 233 பகுதிகளைத் தன்னகத்தே வெறும் வார்த்தைகளாக மட்டும் கொண்டிருக்காமல் சில பகுதிகளில் கூடுதல் விளக்கங்களுடனும் கொண்டுள்ளது. எதிர்கால மங்கோலிய அரசகுலத்திற்கு அறிவுறுத்தப்பட்ட செங்கிஸ் கானின் ஞானம் எனப்படும் நெறிமுறை நடத்தைக் குறிப்புகளுக்கான முக்கிய ஆதாரம் இதுவாகும். இதன் காரணமாக இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மங்கோலியாவின் தோர்னோடு மாகாணத்தில் வாழ்ந்த தரி என்ற ஒரு செங்கிஸ் கான் வழித்தோன்றலிடமிருந்து 1926ஆம் ஆண்டு சமியான் என்பவர் உண்மையான தங்கச் சுருக்க நூலை உலான் பத்தூருக்குக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார். இந்நூலை 1955ஆம் ஆண்டு சார்லசு பவ்டன் என்பவர் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார். மங்கோலிய வரலாற்றை எழுதுவோரால் இந்நூல் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. Temu̇rpu̇rbu̇], [Lobsangdanjin ; belethėgsen So. Tȯrȯbatu ; erhelegėsen Bu. "Ertrn-u̇ qad-un u̇ndu̇su̇legsen tȯrȯ yoson-u jokiyal-i tobcilan quriyaġsan Altan tobci kemeku̇ orosibai". 東京外国語大学附属図書館OPAC. பார்க்கப்பட்ட நாள் 2017-02-12.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கச்_சுருக்கம்&oldid=3444856" இலிருந்து மீள்விக்கப்பட்டது