உள்ளடக்கத்துக்குச் செல்

டைர்னசைட்டு-(La)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைர்னசைட்டு-(La)
Dyrnaesite-(La)
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டுக் கனிமம்
வேதி வாய்பாடுNa
8
Ce4+
(La,REE)
2
(PO
4
)
6
இனங்காணல்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
மேற்கோள்கள்[1][2]

டைர்னசைட்டு-(La) (Dyrnaesite-(La)) என்பது Na8Ce4+(La,REE)2(PO4)6 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மிகவும் அரியதொரு பாசுப்பேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது.[1][2] மற்றொரு அரிய பாசுப்பேட்டுக் கனிமமான விட்டுசைட்டு-(Ce) உடன் டைர்னசைட்டு-(La) கனிமம் தொடர்பு கொண்டுள்ளது. இது தெற்கு கிரீன்லாந்தின் ஒரு வகை கார சைனைட்டுப் பாறையான உலுச்சாவ்ரைட்டிலிருந்து தோன்றுகிறது. டைர்னசைட்டு-(La) அத்தியாவசிய நான்கிணைய சீரியம் கொண்ட சில அறியப்பட்ட தாதுக்களில் ஒன்றாகும். செரியாணைட்டு-(Ce) கனிமமும் சுடெண்டிடைட்டும் வேறுசில சீரியம் கொண்ட கனிமங்களாகும்.[3][4]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் டைர்னசைட்டு-(La) கனிமத்தை Dyr-La[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Rønsbo, J. G., Balić-Žunić, T., and Petersen, O. V., 2015. Dyrnaesite-(La), IMA 2014-070. CNMNC Newsletter No. 23, February 2015, page 54; Mineralogical Magazine, 79, 51–58.
  2. 2.0 2.1 "Dyrnaesite-(La): Dyrnaesite-(La) mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  3. "Cerianite-(Ce): Cerianite-(Ce) mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  4. "Stetindite - Stetindite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைர்னசைட்டு-(La)&oldid=4150020" இலிருந்து மீள்விக்கப்பட்டது