டைமெத்தில்பாசுபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டைமெத்தில்பாசுபைட்டு
Dimethylphosphite.png
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபோனிக் அமிலம், டைமெத்தில் எசுத்தர்
இனங்காட்டிகள்
868-85-9
ChEMBL ChEMBL65359
ChemSpider 85582
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 94853
பண்புகள்
C2H7O3P
வாய்ப்பாட்டு எடை 110.05 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.20 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டைமெத்தில்பாசுபைட்டு (Dimethylphosphite) என்பது (CH3O)2P(O)H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இருமெத்தில்பாசுபைட்டு என்ற பெயராலும் இச்சேர்மத்தை அழைக்கலாம். P-H பிணைப்பின் அதிக வினைத்திறனை உபயோகப்படுத்தி மற்ற கரிமபாசுபரசு சேர்மங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு வினைப்பொருளாக இது செயல்படுகிறது. இருகரிமபாசுபைட்டு என்று வகைப்படுத்தப்படும் இப்பாசுபைட்டு நான்முகி வடிவத்தைக் கொண்டுள்ளது. நிறமற்ற நீர்மமாக டைமெத்தில்பாசுபைட்டு காணப்படுகிறது. பாசுபரசு முக்குளோரைடை மெத்தனாலாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி அல்லது மெத்தனாலுடன் டையெத்திலீன்பாசுபைட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் டைமெத்தில்பாசுபைட்டு உருவாகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Balint, Erika; Tajti, Adam; Drahos, Laszlo; Ilia, Gheorge; Keglevich, Gyorgy (2013). "Alcoholysis of Dialkyl Phosphites Under Microwave Conditions". Current Organic Chemistry 17: 555–562.