டைகுரோகுளோசிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டைகுரோகுளோசிடே
குவாசிபா எக்சிலிஸ்பின்னோசா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: நீர்நில வாழ்வன
வரிசை: வாலற்றன
குடும்பம்: டைகுரோகுளோசிடே
துணைக்குடும்பம்
  • டைக்ரோக்ளோசினே
  • ஊசிடோசைஜினே

டைகுரோகுளோசிடே (Dicroglossidae) எனும் தவளை குடும்பம்[1][2] ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது. பெரும்பாலான பேரினங்களும் சிற்றினங்களும் ஆசியாவில் காணப்படுகின்றன. இக்குடும்பத்தின் தவளைகள் முட்கரண்டி-நாக்கு தவளைகள் என அறியப்படுகின்றன.[1]

டைகுரோகுளோசிடே முன்னர் இரானிடே குடும்பத்தில் ஒரு துணைக் குடும்பமாகக் கருதப்பட்டது. ஆனால் குடும்பமாக இப்போது இதன் நிலை உயர்த்தப்பட்டுள்ளது.[1][2][3]

துணை குடும்பங்கள் மற்றும் பேரினங்கள்[தொகு]

இரண்டு துணைக் குடும்பங்கள், மூலத்தைப் பொறுத்து 13-15 பேரினங்களுடன் 213 சிற்றினங்களைக் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3][1]

டைக்ரோக்ளோசினே ஆண்டர்சன், 1871 — 12 பேரினங்கள் 197 சிற்றினங்களுடன்[4]

  • அலோபா ஒக்லர் மற்றும் துபோயிசு, 2006 (இரண்டு சிற்றினங்கள்)
  • கிரிசோபா ஓக்லர் மற்றும் டுபோயிசு, 2006 (ஒரு சிற்றினம்)
  • யூப்லிக்டிசு பிட்சிங்கர், 1843 (எட்டு சிற்றினங்கள்)
  • பெஜெர்வர்யா போல்கே, 1915 (13 சிற்றினங்கள்)
  • ஹோப்லோபாட்ராசசு பீட்டர்சு, 1863 (ஐந்து சிற்றினங்கள்)
  • லிம்னோனெக்டெசு பிட்சிங்கர், 1843 (74 சிற்றினங்கள்)
  • மினர்வராயா, ஓக்லர் மற்றும் பிஜூ, 2001 (38 சிற்றினங்கள்)
  • நானோப்ரைச்ய் குந்தர், 1869 (நான்கு சிற்றினங்கள்)
  • நானோரானா குந்தர், 1896 (30 சிற்றினங்கள்)
  • ஓம்ப்ரானா துபோயிசு, 1992 (ஒரு சிற்றினம்)
  • குவாசிபா துபோயிசு, 1992 (11 சிற்றினங்கள்)
  • இசுபாரோதீகா குந்தர், 1859 (பத்து சிற்றினங்கள்)

ஊசிடோசைஜினே பே யி மற்றும் ஹூவாங், 1990-இரண்டு பேரினங்களில் 16 சிற்றினங்கள்:[5]

  • இங்ஜெனெரானா துபாயிசு, 1987 (நான்கு சிற்றினங்கள்)
  • ஆக்சிடோசிகா குகல் மற்றும் வான் ஹாசெல்ட், 1822 (12 சிற்றினங்கள்)

இனஉறவுமுறை[தொகு]

பைரான் மற்றும் வையென்சு (2011) டைகுரோகுளோசிடேவினை பின்வருமாறு உறவு முறைகளைப் பிரிக்கின்றனர்.[6] டைகுரோகுளோசிடே ரனிசாலிடேவின் சகோதர குழுவாகும்.[6]

ஊசிடோசைஜினே

இங்ஜெனெரானா

ஊசிடொசைகா

டைக்ரோக்ளோசினே

நானோரானா

லிம்னோனெக்டெசு

நானோபைரைசு

யூப்லிக்டிசு

ஹோப்லோபாட்ராசசு

இசுபாரோதீகா (தவளை)

பெஜெர்வர்யா

சக்கீரனா

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Frost, Darrel R. (2014). "Dicroglossidae Anderson, 1871". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0 (American Museum of Natural History). http://research.amnh.org/vz/herpetology/amphibia/Amphibia/Anura/Dicroglossidae. 
  2. 2.0 2.1 "Dicroglossidae Anderson, 1871". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). http://www.itis.gov/servlet/SingleRpt/SingleRpt?search_topic=TSN&search_value=773183. 
  3. 3.0 3.1 "Dicroglossidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application] (Berkeley, California: AmphibiaWeb). 2014. http://www.amphibiaweb.org/lists/Dicroglossidae.shtml. 
  4. Frost, Darrel R. (2014). "Dicroglossinae Anderson, 1871". American Museum of Natural History. http://research.amnh.org/vz/herpetology/amphibia/Amphibia/Anura/Dicroglossidae/Dicroglossinae. 
  5. Frost, Darrel R. (2014). "Occidozyginae Fei, Ye, and Huang, 1990". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0 (American Museum of Natural History). http://research.amnh.org/vz/herpetology/amphibia/Amphibia/Anura/Dicroglossidae/Occidozyginae. 
  6. 6.0 6.1 R. Alexander Pyron; John J. Wiens (2011). "A large-scale phylogeny of Amphibia including over 2800 species, and a revised classification of extant frogs, salamanders, and caecilians". Molecular Phylogenetics and Evolution 61 (2): 543–583. doi:10.1016/j.ympev.2011.06.012. பப்மெட்:21723399. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைகுரோகுளோசிடே&oldid=3418371" இருந்து மீள்விக்கப்பட்டது