டேனியல் காவ்தெரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேனியல் காவ்தெரி
Daniel Cawdery
நாடுதென் ஆப்பிரிக்கா
பிறப்புசூலை 20, 1982 (1982-07-20) (அகவை 41)
பட்டம்பன்னாட்டு மாசுட்டர் (2014)
பிடே தரவுகோள்2419 (திசம்பர் 2021) 2388 (June 2023)
உச்சத் தரவுகோள்2449 (ஆகத்து 2017)

டேனியல் காவ்தெரி (Daniel Cawdery) தென்னாப்பிரிக்க நாட்டைச் சேற்ந்த ஒரு சதுரங்க வீரர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு இவருக்கு பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தை வழங்கியது. 2008 ஆம் ஆண்டில் வேட்பாளர் மாசுட்டர் பட்டமும் 2013 ஆம் ஆண்டில் பிடே மாசுட்டர் பட்டமும் இவருக்குக் கிடைத்தன.

2015 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க சதுரங்க வெற்றியாளர் போட்டியை இவர் வென்றார், [1] [2] மேலும் தென்னாப்பிரிக்க சதுரங்க ஒலிம்பியாடு அணிக்காக 1998, 2006, 2008, 2012, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் விளையாடியுள்ளார். [3] [4] [5] [6] [7]

காவ்தெரி 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றார். அங்கு இவர் முதல் சுற்றில் வெற்றியாளரான லெவோன் அரோனியனால் தோற்கடிக்கப்பட்டார். [8] 2023 ஆண்டு சதுரங்க உலகக் கோப்பை போட்டியியிலும் விளையாடினார். இப்போட்டியில் முதல் சுற்றில் கிறிசுடோபல் என்ரிக்வேசு வில்லாக்ராவினால் தோற்கடிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Mark Crowther (29 December 2015). "THE WEEK IN CHESS 1103". TWIC. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
  2. "Chess-Results Server Chess-results.com - 2022 SACCC". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-16.
  3. "33th Chess Olympiad 1998 Open". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
  4. "37th Chess Olympiad 2006 Open". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
  5. "38th Olympiad Dresden 2008 Open". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
  6. "40th Olympiad Istanbul 2012 Open". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
  7. "42nd Olympiad Baku 2016 Open". chess-results.com. பார்க்கப்பட்ட நாள் 8 September 2016.
  8. admin500. "Results". FIDE World Chess Cup 2017 Tbilisi Georgia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

புற இணைப்புகள்[தொகு]

  • Daniel Cawdery rating card at FIDE
  • Daniel Cawdery player profile and games at Chessgames.com
  • Daniel Cawdery chess games at 365Chess.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_காவ்தெரி&oldid=3779761" இலிருந்து மீள்விக்கப்பட்டது