42 வது சதுரங்க ஒலிம்பியாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
42 வது சதுரங்க ஒலிம்பியாடு
நாட்கள் 17 செப்டம்பர் 2016 முதல் 30 செப்டம்பர் 2016 வரை
போட்டியாளர்கள்
அணிகள்
நாடுகள்
போட்டி நடக்குமிடம் பக்கூ சதுரங்கக் கழகம்
அமைவிடம் பக்கூ, அசர்பைசான்

42 வது சதுரங்க ஒலிம்பியாடு (42nd Chess Olympiad) 2016 ஆம் ஆண்டில் அசர்பைசான் நாட்டின் தலைநகரமும் துறைமுகமுமான பக்கூவில் நடைபெற உள்ளது. பிடே இப்போட்டிகளை ஏற்பாடு செய்து நடத்துகிறது.[1] பல்காரியாவில் உள்ள அல்பேனா மற்றும் எசுத்தோனியாவில் உள்ள தாலின் நகரங்களும் இப்போட்டியை நடத்துகின்ற ஆர்வத்தில் ஏலத்தில் பங்கேற்றன. ஆனால் இரண்டு நகரங்களுமே வாக்களிப்பிற்கு முன்பாக முன்னிலைப்படுத்தாத காரணத்தால் அவற்றுக்கான ஒப்புதல் வழங்கப்படவில்லை.

ஆர்மீனியா நாட்டின் பிரதிநிதிகள் தங்கள் நாட்டு சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்பது சாத்தியமற்றது என்று அறிவித்துள்ளனர்.[2] மூன்று முறை சதுரங்க ஒலிம்பியாடை வெற்றி கொண்ட அவர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பினாலும், 2016 போட்டிகளை நடத்த மற்ற நாடுகள் ஏதும் விருப்பம் தெரிவிக்காத காரணத்தால் பக்கூ நகரம் இவ்வாய்ப்பை ஏற்றுக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chess Olympiad 2016 in Baku". Chessdom. 2012-09-08. Archived from the original on 2014-07-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.
  2. Atarov, Evgeny (September 2012). "Baku to host the 2016 Olympiad". Whychess.com. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)