டெல்டா கடற்கரை
டெல்டா கடற்கரை | |
---|---|
கோடி பெங்கரே | |
ஆள்கூறுகள்: 13°26′59″N 74°41′42″E / 13.4496834°N 74.695133°E | |
Country | இந்தியா |
இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் | கர்நாடகா |
இந்தியாவின் மாவட்டங்களின் பட்டியல் | உடுப்பி |
நகரம் | உடுப்பி |
மொழிகள் | |
• அதிகாரி | துளு, கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (ஒ.ச.நே) |
வாகனப் பதிவு | கேஏ 20 |
இணையதளம் | karnataka |
டெல்டா கடற்கரை (Delta Beach) கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கோடி பெங்கரே என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. கோடி பெங்க்ரே கடற்கரை என்றும் இக்கடற்கரை அழைக்கப்படுகிறது. சுவர்ணா நதி அரபிக்கடலை சந்திக்கும் முகத்துவாரத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது.[1]
உள்ளூரில் ""குத்ரு"" என்று அழைக்கப்படும் சிறிய தீவுகள் டெல்டா கடற்கரையின் சுற்றுப்புறத்தில் உள்ளன . டெல்டா கடற்கரையில் மீன்வளத்துக்கான சிறிய துறைமுகம் ஒன்று உள்ளது.
போக்குவரத்து
[தொகு]டெல்டா கடற்கரை உடுப்பியிலிருந்து கோடி பெங்கரே ஊட்டு சாலையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உடுப்பியில் இருந்து நகரப் பேருந்துகள் கோடி பெங்ரே, கெம்மானு மற்றும் ஊட்டு ஆகிய இடங்களுக்கு அடிக்கடி பயணம் செய்கின்றன. டெல்டா கடற்கரை மால்பே கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கள் கடை
[தொகு]பெங்கரேயில் பல குளிரூட்டப்பட்ட கள் விற்பனைக் கடைகள் உள்ளன. [2] இப்பகுதி அங்கு கிடைக்கும் புத்தம்புதிய கடல் உணவுகளுக்கும் பெயர் பெற்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A travel guide to coastal Karnataka". 20 October 2018.
- ↑ "Delta Beach, ahoy!".