டெயிட் எரிமலை
டெயிட் Teide | |
---|---|
![]() | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 3,718 m (12,198 ft) |
இடவியல் முக்கியத்துவம் | 3,718 m (12,198 ft) 40வது |
புவியியல் | |
அமைவிடம் | டெனெரீஃப், ![]() |
நிலவியல் | |
மலையின் வகை | அடுக்கு எரிமலை |
கடைசி வெடிப்பு | 1909 |
Climbing | |
First ascent | 1582 (சேர் எட்மண்ட் ஸ்கோரி |
டெயிட் மலை (Mount Teide, எசுப்பானியம்: Pico del Teide, என்பது கேனரி தீவுகளில் அமைந்துள்ள ஒரு எரிமலை. இதன் உயரம் 3,718 மீட்டர் ஆகும். இதுவே எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும், மற்றும் உலகின் மூன்றாவது உயரமான எரிமலையும் ஆகும்.
கடைசியாக இவ்வெரிமலை 1909 ஆம் ஆண்டில் வெடித்தது. டெயிட் எரிமலையும் அதனைச் சூழவுள்ள பகுதியும் டெயிட் தேசியப் பூங்கா என அழைக்கப்படுகிறது. 18,900 எக்டேர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இப்பூங்கா யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக 2007 சூன் 29 இல் அறிவிக்கப்பட்டது[1].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Teide National Park". World Heritage List. UNESCO. 2009-01-18 அன்று பார்க்கப்பட்டது.