டெபோரா சாம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெபோரா சாம்சன்
Deborah Sampson
பெண் விமர்சனம்: புரட்சிப் போரில் பெண் சிப்பாய் டெபோரா சாம்ப்சனின் வாழ்க்கை முன்பக்கம்.
பிறப்பு(1760-12-17)திசம்பர் 17, 1760
பிளம்ப்டன், மாசசூசெட்ஸ்
இறப்புஏப்ரல் 29, 1827(1827-04-29) (அகவை 66)
ஷரோன், மாசசூசெட்ஸ்
அடக்கம்
ராக் ரிட்ஜ் கல்லறை, ஷரோன், மாசசூசெட்ஸ்
சார்புஅமெரிக்கா
சேவை/கிளைஅமெரிக்க விடுதலைப் படை
சேவைக்காலம்1782–1783
தரம்Private
படைப்பிரிவுLight Infantry Company, 4th Massachusetts Regiment
போர்கள்/யுத்தங்கள்அமெரிக்கப் புரட்சிப் போர்
துணை(கள்)பெஞ்சமின் கனெட் (தி. 1785)
பிள்ளைகள்4
வேறு செயற்பாடுகள்ஆசிரியர்
நெசவாளர்
சிப்பாய்
விரிவுரையாளர்
விவசாயி

டெபோரா சாம்சன் (Deborah Sampson) என்று அழைக்கப்படும் டெபோரா சாம்ப்சன் கனெட், [1] 17, திசம்பர், 1760 அன்று அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பிளம்ப்டனில் பிறந்தார். [2] அக்காலத்தில் படைத்துறையில் பெண்கள் பணியாற்ற அனுமதி இல்லாத காரணத்தினால் இவர் ஒரு ஆணாக வேடமிட்டு, ராபர்ட் சர்ட்லிஃப் என்ற பெயரில் அமெரிக்க விடுதலைப் படையில் இணைந்து அமெரிக்க புரட்சிப் போரில் கலந்துகொண்டார். 1783 ஆம் ஆண்டு பிலடெல்பியாவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டபோது அவரது பாலினம் வெளிப்படது. அதுவரை சுமார் 17 மாதங்கள் இவர் ஆண் வேடத்தில் இருந்து போரில் ஈடுபட்டார் [3] இருடைய உண்மையான அடையாளம் இவருடைய தளபதிக்குத் தெரியப்படுத்தப்பட்ட பிறகு, இவர் வெஸ்ட் பாயிண்டில் மரியாதையுடன் படையிலிருந்து வெளியேற்றபட்டார். [3] படையில் இருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு, சாம்சன் 1785 இல் பெஞ்சமின் கனெட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1802 ஆம் ஆண்டில், தனது போர்க்கால அனுபவங்களைப் பற்றி விரிவுரை ஆற்றுவதற்குச் சுற்றுப்பயணத்திற்குச் சென்ற முதல் பெண்களில் இவரும் ஒருவராவார். [3] இவர் 1827 இல் ஷரோன், மாசசூசெட்ஸில் இறந்தார் [3] இவர் மே 23, 1983 இல் காமன்வெல்த் ஆஃப் மாசசூசெட்ஸின் அதிகாரப்பூர்வ கதாநாயகியாக அறிவிக்கப்பட்டார். மேலும் 1985 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க யுனைடெட் ஸ்டேட்ஸ் கேபிடல் ஹிஸ்டோரிகல் சொசைட்டி "டெபோரா சாம்சனை" நினைவுப் பதக்கத்துடன் இவரை கௌரவித்தது. [4]

குறிப்புகள்[தொகு]

  1. Lombard, Anne S (2004). "The Woman Who Played the Man: Deborah Sampson, Soldier in the American Revolution". Reviews in American History 32 (4): 493–498. doi:10.1353/rah.2004.0069. பன்னாட்டுத் தர தொடர் எண்:1080-6628. https://muse.jhu.edu/article/176271. 
  2. Price, Peggy (2013-01-01). "National Women's History Museum: Biographies". Reference Reviews 27 (5): 51–52. doi:10.1108/RR-02-2013-0045. பன்னாட்டுத் தர தொடர் எண்:0950-4125. https://doi.org/10.1108/RR-02-2013-0045. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Deborah Sampson". George Washington's Mount Vernon (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-10.
  4. Leonard, Patrick J. (2006-10-16). "Deborah Samson, Official Heroine of the State of Massachusetts". Canton Massachusetts Historical Society.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெபோரா_சாம்சன்&oldid=3690257" இலிருந்து மீள்விக்கப்பட்டது