டெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள் என்பவை, ஒரு மென்பொருளானது உண்மையாகவே கட்டற்ற மென்பொருள்தானா என்பதைத் தீர்மானிக்க உதவும் வழிகாட்டிகள். அவை கட்டற்ற மென்பொருட்கள் எனில் டெபியன் இயக்குதளத்தில் சேர்க்கப்பட, இவை உதவுகின்றன. இவை டெபியன் சமூக ஒப்பந்தத்தின் ஒரு பகிமியாக உள்ளன.

டெபியன் கட்டற்ற மென்பொருளுக்கான வரையறைகள்[தொகு]

 1. இலவசமாக யாவருக்கும் பகிரும் உரிமை
 2. மூலநிரலை சேர்த்தே அளித்தல்
 3. மாற்றங்களையும் புது மென்பொருளாக மாற்றுதலையும் அனுமதித்தல்
 4. மூலநிரலின் இணக்கமான தன்மை
 5. தனியாருக்கோ, குழுவினருக்கோ பேதம் இல்லாதிருத்தல்
 6. எல்லா வித பயன்பாடுகளையும் அனுமதித்தல் ( வணிகப் பயன்பாடுகளையும்)
 7. பகிரும், பகிரப்படும் யாவருக்கும் இதே உரிமைகளை அளித்தல்
 8. ஒரு குறிப்பிட்ட மென்பொருள் நிரலுக்கு மட்டும் இந்த உரிமை இருக்கக்கூடாது. 
 9. பிற மென்பொருட்களுக்கு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தக் கூடாது

 GNU GPL, BSD, மற்றும் Artistic  உரிமங்கள் மேற்கண்ட வரையறைகளுடன் இருப்பதால், கட்டற்ற உரிமங்களாக்க் கருதப்படுகின்றன. [1]

வரலாறு[தொகு]

டெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகள் முதலில் ஜூலை 1997 ல் டெபியன் சமூக ஒப்பந்தம் வெளியானபோது, சேர்ந்து வெளியிடப்பட்டன. [2]   Ean Schuessler  என்பவர் இந்த உரிமங்களுக்கான தேவையை உணர்த்தினார்.  Bruce Perens மற்றும் பிற டெபியன் பங்களிப்பாளர்கள் இவற்றை இணைந்து உருவாக்கினர். 


டெபியன் கட்டற்ற மென்பொருளுக்கான வரையறைகளை சற்றே மாற்றி, திறமூல மென்பொருட்களுக்கான வரையறைகள் உருவாக்கி, வெளியிடப்பட்டன. பின் கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையின் கட்டற்ற மென்பொருட்களுக்கான விதிகள் உருவாக்கப்பட்டன. ரிச்சர்டு ஸ்டால்மன் திறமூல மென்பொருட்களுக்கும், கட்டற்ற மென்பொருட்களுக்கும் உள்ளவித்தியாசங்களை உணர்ந்தார். கட்டற்ற மென்பொருட்களை சிறந்தவை என்று அறிந்து, அந்தக் கொள்கைகளையே பின்பற்றி, பரப்புரை செய்து வருகிறார்.[3]  கட்டற்ற மென்பொருட்களுக்கான 4 சுதந்திரங்களே டெபியனின் மென்பொருட்களுக்கான வரையறைகளில் அமைந்துள்ளன,

நவம்பர் 1998ல் ஐயான் ஜாக்சன் என்பவரும் பலரும் இணைந்து இந்த வரைமுறைகளில் மாற்றங்களை பரிந்துரை செய்தனர். ஆனால் அந்த மாற்றங்கள் அனுமதிக்கப்படவில்லை. 

2011 வரையிலும் எந்த மாற்றங்களும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் டெபியன் சமூக ஒப்பந்த்த்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இவற்றிலும் மாற்றங்கள் உருவாகக் காரணமாயின. 

டெபியன் பொது மாற்றங்கள் 2004-003, டெபியன் சமூக ஒப்பந்த மாற்றங்கள் ஆவணம் உருவாக்கப்பட்டது.[4]

டெபியன் இயக்குதளத்தை கட்டற்ற மென்பொருளாக மட்டுமே வெளியிடுவோம் என்பதை டெபியன் இயக்குதளம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்தையும் கட்டற்ற மென்பொருளாக வெளியிடுவோம் என்று புது முடிவுகள் எடுக்கப்பட்டன. [5]

பயன்கள்[தொகு]

மென்பொருள்[தொகு]

டெபியன்-சட்டங்கள் என்ற மின்னஞ்சல் குழுவில் இவ்விதிகள் சார்ந்த உரையாடல்கள் நடைபெறுகின்றன. டெபியனில் ஒரு மென்பொருளைச் சேர்க்க, அவர் இந்தக் குழுவிற்கு மென்பொருளை அனுப்ப வேண்டும். அதை பல்வேறு நிரல்களும் பிறரும்,  உண்மையிலே கட்டற்ற மென்பொருளா என்று சோதிப்பர். அனைவரும் ஒத்துக் கொண்டபின்னர், அந்த மென்பொருளை டெபியனில் சேர்த்துக் கொள்வர்.

மென்பொருள் அல்லாதவை[தொகு]

இவ்விதிகளை மென்பொருட்களுக்கு மட்டுமின்றி, பிற கோப்புகளுக்கும் பயன்படுத்தலாம் என்று பலரும் யோசித்தனர். எண்ணிம வடிவில் கிடைக்கும் அனைத்துக்கும் இவை பொருந்தும்.  2004 ல் டெபியன் தனது ஆவணங்கள், பல்லூடகக் கோப்புகள் பொன்ற அனைத்துக்கும் இதே வரையறைகளைப் பின்பற்றத் தொடங்கியது.  ஏப்ரல் 2007 ல் வெளியான டெபியன் 4 ல் இருந்து இவை பின்பற்றப்படுகின்றன.

GFDL[தொகு]

டெபியன் கட்டற்ற மென்பொருள் வரையறைகளுடன் குனு கட்டற்ற மென்பொருள் வரையறைகள் சற்றே வேறுபடுகின்றன. 

இந்த வேறுபாடுகளால், "non-free" என்ற புதுப்பிரிவு உருவாக்கப்பட்டது. டெபியன் கொள்கைகளுடன் வேறுபடும் மென்பொருட்கள் இந்தப் பிரிவில் வழங்கப் படுகின்றன.

பல்லூடகக் கோப்புகள்[தொகு]

பல்லூடகக் கோப்புகளுக்கான மூலம் எது என்பதில் பல்வேறு கருத்துகள் உள்ளன. ஒரு படத்தின் மூலம் என்பது அதன் பெரிய, சுருக்கப்படாத வடிவமாக இருக்கலாம். அல்லது அதை உருவாக்கப்பயன்படுத்திய மென்பொருளின் வெளியீடாக இருக்கலாம். ஒரு முப்பரிமாணப் படத்தின் மூலம் என்பது அதை உருவாக்கப் பயன்படுத்திய மென்பொருளின் வெளியீடு ஆகும். அது இருந்தால் மட்டுமே பிறர் அதில் மாறுதல்கள் செய்ய இயலும்.


மேலும் காண்க[தொகு]

 • The Free Software Definition
 • History of free and open-source software
 • Comparison of free and open-source software licenses

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]