டென்மார்க்கின் முடியாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டென்மார்க்கின் முடியாட்சி அல்லது டேனிசிய முடியாட்சி என்றழைக்கப்படும் முடியாட்சி டென்மார்க் இராச்சியத்தை தலைமையிடமாக கொண்டு ஆளப்படுவதாகும். இந்ந இராச்சியம் டென்மார்க் நாட்டை மட்டும் அல்லாது கிரீன்லாந்து மற்றும் பரோயே தீவுகள் முதலிய தன்னாட்சி பகுதிகளையும் உள்ளடக்கியது. டென்மார்க் இராச்சியம் எட்டாம் நூற்றாண்டில் இருந்தே அறியப்படுகிறது. பிரிசியன் என்ற ஜெர்மானிய இனக்குழுக்களின் வழித்தோன்றல்களே இதன் அரசுகளாக இருந்தனர். 804 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்த காட்பிரீடு மன்னர் ஆட்சி காலத்தில் டென்மார்கின் பல மாகாணங்கள் இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் வந்தது.[1] தற்போது உள்ள ஒருங்கிணைந்த டேனிசிய இராச்சியம் வைக்கிங் மன்னர்களான கோரம் மன்னர் மற்றும் ஹரால்டு மன்னர் அவர்கள் பத்தாம் நூற்றாண்டில் உருவாக்கினர். இது ஐரோப்பிய கண்டத்தில் அமைந்த மூன்றாவது பழைய முடியாட்சி ஆகும். ஆரம்ப காலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் முடியாட்சி ஆகும். பின்பு 17ஆம் நூற்றாண்டில் இது வாரிசு முறை முடியாட்சியாக மாறியது. டென்மார்க்கின் மூன்றாம் பிரடெரிக் மன்னர் மூலம் 1849 ஆம் ஆண்டு முதல் இந்த முறை சட்டமாக்கப்பட்டது. தற்போது குலுக்ஸ்பெர்க் இல்லம் அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியாளர்களாக இருந்து வருகின்றனர்.

அரசி[தொகு]

இரண்டாம் மார்கரீத் (டேனிய மொழி: Margrethe 2., பலுக்கல் [mɑˈɡʁæːˀdə]; முழுப்பெயர்: மார்கரீத் அலெக்சாண்டிரின் போர்கில்டர் இன்கிரிடு ; பிறப்பு 16 ஏப்ரல் 1940) டென்மார்க்கின் அரசி ஆவார், அதேபோல் டென்மார்க் தேவாலயம் உச்ச அதிகாரம் படைத்தவராகவும் மற்றும் டேனிஷ் பாதுகாப்பு படையின் தலைமை தளபதியும் ஆவார். இவர் குலுக்ஸ்பெர்க்ஸ் என்ற அரச குடும்பத்தில் பிறந்தவர். இந்த அரச குடும்பம் வடக்கு ஜெர்மனியைச் சார்ந்தது. இவர் டென்மார்கின் ஒன்பதாம் பிரடெரிக் மற்றும் சுவீடனின் இன்கிரிடுக்கும் மூத்த மகளாக பிறந்தார். இவர் தன் தந்தை மறைவுக்கு பின் 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் நாள் அரியணை ஏறினார். இவர் அதற்கு முன்பே 1953 ஆம் ஆண்டு இவர் தந்தை மூலமாக அரச வாரிசாக அறிவிக்கப்பட்டார். டேனிஷ் அரசியலமைப்பு சட்டம் பெண் வாரிசுகளுக்கு அரியணை உரிமை வழங்குகிறது. டென்மார்கின் முதலாம் மார்கரீத் அரசி 1375-1413 ஆம் ஆண்டு ஆட்சி காலத்திற்கு பின் வந்த முதல் அரசி ஆவார். 1967 ஆம் ஆண்டு ஹென்றி டி லபோர்டி மோன்பிசாட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளவரசர் பிரடெரிக், இளவரசர் சோச்சிம் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் டேனிஷ் அரியணை ஏறும் போது இவருக்கு வயது 52 ஆகும். இவரே டேனிஷின் இரண்டாவது அதிக நாள் ஆட்சியாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Berend, Nora (22 November 2007). "Christianization and the Rise of Christian Monarchy: Scandinavia, Central Europe and Rus' c.900–1200". Cambridge University Press – via Google Books.