டென்னிசு பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2012 பிரெஞ்சு ஓபனில் டென்னிசு பந்துகள்

டென்னிசு பந்து என்பது டென்னிசு விளையாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பந்து ஆகும். டென்னிசு பந்துகள் பெரும்பாலும் ஒளிரும் மஞ்சள் நிறத்தில் உள்ளன, ஆனால் பொழுதுபோக்கு விளையாட்டுகளில் பிற வண்ணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. டென்னிசு பந்துகள் நாரினால் செய்யப்பட்ட  ஒரு தோலால் மூடப்பட்டிருக்கும், இது அவற்றின் காற்றியக்க பண்புகளை மாற்றியமைக்கிறது. அதன் மீது வெள்ளை நிற வளைந்த வட்ட வடிவ கோடுகளை கொண்டுள்ளன.

விவரக்குறிப்புகள்[தொகு]

குறுக்காக வெட்டப்பட்ட ஒரு டென்னிசு பந்து அதன் உட்புறத்தை காட்டுகிறது

நவீன டென்னிசு பந்துகள் குறிப்பிட்ட அளவு, எடை மற்றும் சிதைவு போன்ற அளவுகோல்களுக்கு இணங்கி இருக்க வேண்டும்.பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு (ஐ. டி. எப்.) இந்த பந்துகளின் விட்டத்தை 6.54-6.86 செ.மீ. (2.57-2.70 அங்குலங்கள்) என வரையறுக்கிறது.[1] இந்த பந்துகள் 56.0-59.4 கிராம் எடை கொண்டு, பொதுவாக ஒரு சதுர அங்குலத்திற்கு 12 பவுண்டுகள் என்ற அளவில் உட்புற காற்று அழுத்தத்தை கொண்டிருக்க வேண்டும்.[2][3] மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டுமே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பந்துகள் "ஆப்டிக் மஞ்சள்" என்று அழைக்கப்படும் ஒளிரும் மஞ்சள் நிறத்தில் உள்ளன. அவை தொலைக்காட்சியில் காண்போருக்கு பந்தை காண எளிதாக இருப்பதாக நிரூபிக்கும் ஆராய்ச்சியைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஒளிரும் மஞ்சள் நிறத்தை ஒரு சிலர் வெளிர் பச்சை நிறமாக கருதுகின்றனர்.[4]

ஒரு டென்னிசு பந்து காற்று நிரப்பப்பட்ட ஒரு ரப்பர் தோலால் ஆன கூட்டினால் ஆனது. இந்த ரப்பர் கூடு கம்பளி, நைலான் அல்லது பருத்தியால் செய்யப்பட்ட ஒரு தோலால் மூடப்படுகின்றது.[5] இந்த மேல் போர்த்தப்பட்ட தோலானது காற்றியக்க இழுவை குறைக்கிறது மற்றும் பந்துக்கு சிறந்த பறக்கும் பண்புகளை வழங்குகிறது.[6][7] பெரும்பாலும், பந்துகளில் ஒரு வரிசை எண் இருக்கும். இது வெவ்வேறு பந்துகளை அடையாளப்படுத்த மற்றும் வேறுபடுத்த உதவுகிறது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ITF Technical - History". International Tennis Federation. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  2. Communications, Grainger Engineering Office of Marketing and. "Tennis Ball Facts". van.physics.illinois.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  3. TennisCompanion (2017-11-18). "Ball in Tennis | Definition, Examples, and Common Questions About The Ball". TennisCompanion (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-04-01.
  4. Koren, Marina (2018-02-15). "What Color Is a Tennis Ball?". The Atlantic (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.
  5. Fischetti, Mark (April 2005). "Uniform Variety". Scientific American 292 (4): 94–95. doi:10.1038/scientificamerican0405-94. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8733. http://dx.doi.org/10.1038/scientificamerican0405-94. 
  6. "Golf Balls, Cricket Balls and Tennis Balls". Princeton University. 5 October 2005. பார்க்கப்பட்ட நாள் 2009-10-20.
  7. Dr. Rabi Mehta of NASA-Ames, entitled Aerodynamics of sportsballs, Annual Review of Fluid Mechanics, 17:151–189, 1985.
  8. "Colors & Numbers on Tennis Balls". Epic Tennis Academy. பார்க்கப்பட்ட நாள் 2 September 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்னிசு_பந்து&oldid=3917855" இலிருந்து மீள்விக்கப்பட்டது